“மும்மொழிக் கொள்கையை எதிர்த்துக்கொண்டே, தன்னுடைய பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக” பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றன. என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கப்சா நிருபரின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்தார். “அந்தக் கட்சிகளுக்கு எதிராக நானே முன்னின்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்று எச்சரிக்கிறேன்.

எந்தெந்த கட்சிகள் மும்மொழிக் கொள்கைகளை எதிர்க்கின்றனவோ அந்தக் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர், வார்டு மெம்பர் வரைக்குமான பதவியில் இருப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று பட்டியல் எடுப்பேன். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்பது உறுதியானால், அவர்களது வீட்டுக்கு முன்னால் அவர்களது கட்சித் தொண்டர்களையும் சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்துவேன்.

உதாரணமாக, தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழியின் மகன் எங்கே படிக்கிறார் என்று நான் லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறேன். “வசதியான உங்கள் பிள்ளைக்கு ஒரு படிப்பு, எங்கள் பிள்ளைக்குக் கிடையாதா?” என்று அவர் வீட்டு முன்னால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்.

சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து டிசி வாங்கி, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிற பள்ளியில் அவரது பிள்ளையைச் சேர்க்கிற வரையில் இந்தப் போராட்டம் தொடரும். அல்லது “நான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க மாட்டேன்” என்று எழுதிக் கொடுக்கிற வரையில் இந்தப் போராட்டம் நடக்கும்.

இப்படிச் செய்தால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும். ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்துகிற வேளச்சேரி சன் ஸைன் ஸ்கூலில் இந்தி நடத்துறீங்களே? ஒரு கொள்கையைப் பேசினால், அதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள். ஊரை ஏமாற்றாதீர்கள். என்றார்.

‘தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம்’ என்று முதல்வரே அறிவித்துவிட்டார். உங்கள் கூட்டணியில் இருக்கிற பாமகவும்கூட அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கிறது. அவர்கள் வீட்டின் முன்பும் போராடுவீர்களா என்று கப்சா நிருபர் கிடுக்கிப்பிடி போட்டார்.


சற்றும் தளராத எச்.ராஜா, “யார் சொன்னாலும் இதுதான் என் நிலைப்பாடு. கூட்டணியில் இருந்தாலும், அவர்களது கருத்து தவறு. ஏற்புடையது இல்லை. அவர்களது குடும்பத்தில் யார் படித்தாலும், அதே போராட்டத்தை நடத்துவோம். உங்கள் வீட்டு குழந்தை மும்மொழிக் கொள்கையில் படிக்கலாம். ஏழை வீட்டுக் குழந்தை படிக்கக் கூடாதா? என்று மக்கள் கேட்கும் காலம் வந்துவிட்டது.” என்றார்.

இப்படி ஒவ்வொரு அரசியல்வாதி வீட்டு முன்பும் ஒவ்வொரு நாள் ராப்பிச்சை போல் உண்ணாவிரதம் இருந்து கட்டக் கடேசியாக உயிர் பிரியா விட்டால் தீக்குளித்து இறப்பேன், ஜெய் ஸ்ரீ ராம்!” என்று நீட்டி முழக்கினார். ஹெச். இராஜா அவர்களே உங்கள் போராட்டம் வெற்றி பெற தீக்குளிக்க வாழ்த்துக்கள். இளைய தலை முறை நல் கல்வி பயின்று நல்ல வளம் பெற உங்கள் செயல் வழி செய்யும்”, என்று கப்சா நிருபர் தன் பங்குக்கு கலாய்த்தார்.

பகிர்