அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மொத்தம் 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம். அயோத்தியில் ராமர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில், அவருக்கு கோயில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (ஆகஸ்ட் 5) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கலை நாட்டவிருக்கிறார்.
இந்த நிலையில், அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மொத்தம் 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தொடங்கி பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக முதலில் வழக்கு தொடுத்த ஹாசீம அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி உள்ளிட்டோர் அடங்குவர் என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அதேசமயம் 90 வயதை கடந்த பிரமுகர்கள், சாதுக்கள், முனிவர்கள், துறவிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கமாட்டார்க எனவும் அறக்கட்டளை கூறியுள்ளது. முன்னதாக, “ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தினம் அதற்கு உகந்த நாளாக இல்லையென மடாதிபதிகளே தெரிவித்துள்ளதாகவும், பொதுமக்கள் மத்தியில் இன்னமும் கொரோனா குறித்த அச்சம் நிலவுவதால், அடிக்கல் நாட்டு விழாவை ஒத்திவைக்க வேண்டும்” என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:
- காலை 9.35 மணி: பிரதமர் மோடி டில்லியிலிருந்து புறப்படுகிறார்.
- 10.35 மணி: உ.பி., மாநிலம் லக்னோ வருகை தருகிறார்.
- 11.30 மணி : அயோத்தி – சகேத் கல்லூரியிலுள்ள ஹெலிபேடுக்கு அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் வந்தடையும்.
- 11.30 மணி : ஹனுமன்கர்ஹியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜை நடத்துகின்றனர்.
- மதியம் 12 மணி: ராம ஜென்மபூமிக்கு வருகை. ராம் லல்லா விராஜ்மனில் சிறப்பு பூஜை.
- 12.15 மணி: பிரதமர் மோடி, பாரிஜாத மரக்கன்று நடுகிறார்
- 12.30 மணி: ராமர் கோவில் பூமி பூஜை விழா துவக்கம்
- 12.40 மணி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- 2.20 மணி: லக்னோ புறப்படுகிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில் மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வரும் சங்கிகளுக்கு முதலில் கோமியம் குடிக்கக் கொடுத்து, பாபா ராம்தேவின் கொரோனில் மருந்து கொடுத்து பின்னர் அனுமதி அளிக்கப்படும் என பாஜக கப்சா செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.