லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலையச் செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.
இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அளவிலான வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உலகெங்கும் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளின் ஆபத்து குறித்தும் அவை பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் டன் கணங்கில் சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஒரு தனியார் பட்டாசு தயாரிப்பு நிறுவனத்தால் வெளிநாட்டில் இருந்து 740 டன் அளவில் அமோனியம் நைட்ரேட்
இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 36 கண்டெய்னர்களில் சராசரியாக 20 ரன் அளவில் இருந்த வேதிப்பொருள் சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வழியாக கொண்டுவரப்பட்டது.
ஆனால், இறக்குமதி தொடர்பான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் 740 டன் அமோனியம் நைட்ரேட் துறைமுக
சேமிப்பு கிடங்கிலேயே வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சில மாதங்களில் துறைமுகப்பகுதியில் இருந்து மாற்றப்பட்ட வேதிப்போருள் தற்போது சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் மணலியில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பெய்ரூட் சம்பவத்தை தொடர்ந்து மணலி சுங்கத்துறை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த வேதிப்பொருளை உடனடியாக ஏலத்தில் விட தேவையான முயற்சிகள் வேகமாக நடைபெற்றுவருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
740 டன் அளவிலான அமோனியம் நைட்ரேட் சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் நேற்று நாடு முழுவதும் உள்ள சுங்க அலுவலகங்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் நாடு முழுவதும் உள்ள சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் துறைமுகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆபத்து விளைவிக்கக்கூடிய வெதிப்பொருட்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தண்ணீர் ஆவியாகாமல் தெர்மாகோல் விட்ட வில்லேஜ் விஞ்ஞானி சயனைடு சயண்டிஸ்ட் செல்லூர் ராஜூ தற்போது கரோனாவை வென்று புதிய ரத்தம் பாய்ச்சிய கையோடு இந்த விவகாரத்தை கவனித்து வெடிபொருளை வெடிக்காமல் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை கவனிப்பார் என தமிழக அரசின் கப்சா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.