இந்தியாவின் நெடுங்கால அரசியல் பிரச்சினைகளில் ஒன்றான ராம ஜென்ம பூமி வழக்கில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதே சமயம், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள, 5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை அவர்கள் விரும்பிய இடத்தில் அரசே வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தெரிவித்தது.

தீர்ப்பின்படி, ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை உருவாக்கப்பட்டு , ராமர் கோயிலுக்கான மாதிரி தயார் செய்யப்பட்டு, வேலைகள் மும்முரமாக நடந்து வந்தன. கொரோனாவால் பணிகள் தாமதமானதை அடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

அயோத்தி ராமர் கோயில்: உலகிலேயே மூன்றாவது பெரிய கோயிலாக வாய்ப்பு. இந்நிலையில், அயோத்தியில் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கான அமைப்பை உத்தரப் பிரதேச மாநில வக்ஃபு வாரியம் அமைத்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அமைப்புக்கு இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ராமஜென்ம பூமி நிலத்தகராறு வழக்கு மட்டும் தீர்த்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து மதத்தினருக்கும் பயனளிக்கும் வகையில் பாபர் மருத்துவமனையும் ஐந்து ஏக்கர் நிலத்தில் அமைய உள்ளது. இதன்மூலம் இலவச மருத்துவம் மக்களுக்கு கிடைக்கும். இதற்கு போட்டியாக பதிலளித்த கப்சா பாஜக சங்கி ஒருவர், ராமர் கோவிலில் வழங்கப்படும் கோமியம் பாபர் மருத்துவமனை மாத்திரையை விட மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்கும் அத்துடன் பாபா ராம்தேவின் கொரோனில் மாத்திரையும் பிரசாதமாக வழங்கப்படும் என்றார்.

பகிர்