சென்னை – போர்ட் பிளேர் இடையே கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழைகளால் அமைக்கப்பட்டுள்ள கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கு 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார். கடலுக்கடியில் ரூ.1,224 கோடி செலவில் 2,300 கி.மீ., தொலைவுக்கு பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கேபிள் இணைப்பால், அந்தமான் நிகோபார் தீவுகளில் மொபைல்போன், லேண்ட் லைனில் விரைவாக சேவை தரலாம். மேம்பட்ட தொலைதொடர்பு இணைப்பு, அந்தமான் தீவுகளின் சுற்றுலா, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

ஒன்றரை ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தமான், நிகோபர் பகுதிகளுக்கு அதிவிரைவு இணையதள வசதி கிடைக்கும். இத்திட்டத்தால், அந்தமானின் சுற்றுலாத்துறை மேம்படும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் 2,300 கி.மீ., தூரம் கடலுக்குடியிலான கேபிள் திட்டத்தை நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. ஆழ் கடல் கணிப்புகள், கேபிள் தரத்தை பராமரிப்பது ஆகியவை எளிதல்ல.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் திட்டம், எளிதான வாழ்க்கைக்கு, நாங்கள் கொண்டுள்ள உறுதித்தன்மையின் சின்னமாகும். இனிமேல், ஆன்லைன் வகுப்புகள், வங்கி சேவை, ஆன்லைன் வணிகம், டெலிமெடிசன் உள்ளிட்டவற்றை அந்தமான் மக்களுக்கும் கிடைக்கும்.ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் சிறப்பு கப்பல்களின் உதவியை கொண்டு 2, 300 கி.மீ.க்கு கடலுக்கு அடியில் கேபிள் கேபிள் பதிக்கும் இத்திட்டம் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை இவ்வாறு அவர் பேசினார்.

இதன்மூலம் ரிலையன்ஸ் ஜியோ டிவி எளிதாக கிடைக்கும். மக்கள் பிரேக்கிங் நியூஸ் பார்த்துக் கொண்டு விளக்கேற்றிகொண்டும் கைதட்டிக் கொண்டும் இருப்பார்கள். நாங்கள் நாட்டை நாசமாக்கும் செயல்களில் நிம்மதியாக வேலையைப் பார்க்கலாம் என்றும் கூறினார்.

பகிர்