தமிழகம் முழுவதும் இன்று மாலை அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் படிக்க தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது. கோடிக்கணக்கான முருக பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டும் வகையில் இந்த நிகழ்வை நடத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இன்று வேல் பூஜை நடைபெறவுள்ளது.

இதனிடையே இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் தமிழ் கடவுள் முருகனை வேண்டிப் பாடும் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருகப் பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று மாலை சரியாக 6.01 மணிக்கு பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும் வேல் அல்லது முருகன் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டுவோம், மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம்.” மேலும், இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள வீடியோவில், அனைத்து முருக பக்தர்களும் அவரவர் வீட்டு வாசலில் வேல் பூஜை செய்து முருகன் அருளை பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் அனைத்து தரப்பு மக்களும், மடாதிபதிகளும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிற்க வேல் கிடைக்காதவர்கள், முருகன் படம் கிடைக்காதவர்கள் தெருவில் ஒட்டி இருக்கும் போஸ்டர்களை கிழித்து ஹாலில் ஒட்டவும், கொரோனா காலத்தில் அமேசானில் ஆன்லைனில் வாங்கிய அட்டைப்பெட்டி மற்றும் மாப் கட்டைகளில் வேல் செய்து ஸ்டூலில் வைத்து வழிபடுவது போல் செல்ஃபீ எடுத்து பாவ்லா காட்டவும் பாஜக சங்கிகள் அழைப்புவிடுத்து காமெடி செய்து வருகின்றனர்.

பகிர்