ஊரடங்கு காரணமாக அயனாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாண்டவ முத்து என்பவர் FC-ஐ புதுப்பிக்க அண்ணாநகர் வட்டார போக்குரவரத்து அலுவலகத்தில் கடந்த 5 மாதங்களாக முயற்சி செய்துள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் தவித்துள்ளார். அவர் பலமுறை ஆட்டோவின் FC புதுப்பிக்க முயற்சி செய்தும், முடியாமல் திணறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஓட்டுநர் முத்து, அவருடைய ஆட்டோவை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர் முத்துவிற்கு, அவரது ஆழ்வேர்பேட்டை இல்லத்தில் வைத்து புதிய ஆட்டோவை வழங்கினார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரங்கநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மையில் தி.மு.க, எம்.எல்.ஏ கு.க.செல்வம் பா.ஜ.கவில் இணையபோவதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவர் தி.மு.கவின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பேசுகையில், சாக்லேட் கொடுத்து எம்.எல்.ஏ கு.க.செல்வத்தை ஏமாற்றி இருக்கிறார்கள் என குறிப்பிட்டு கூறியிருந்தார்.

இதுகுறித்து அ.தி.மு.க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏக் கு.க. செல்வத்தை சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாக கூறியவர் ஒரு ‘சாக்லேட்பாய்’ என உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் ”சாக்லேட்பாய் என்பது ஒன்றும் பெரிய தவறான விஷயம் அல்ல ஆனால் சாக்லேட்பாய் என சொன்னவர் பிளேபாய்” என கலாய்க்கும் விதத்தில் கூறியுள்ளார்.

பின்னர் கப்சா செய்தியாளர்களை தனியாக சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தார். மேலும் இ பாஸ் முறையை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலினை சாக்லேட் பாய் என்று கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை எனவும், என்னை சாக்லேட் பாய் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அந்த கருத்து மிக மிக தவறானது. நான் சினிமாவில் நடிகைகளூடன் பிளேபாய் போல் அதிமுக மகளிரணியில் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் என்றும், சமீபத்தில் உங்கள்நியூஸ் வெளியிட்ட ‘வீதிக்கு வா பேசி தீத்துக்கலாம்’ ஆடியோ ஆதாரம் இதை பறைசாற்றும் என்றும் பதிலளித்தார்.

பகிர்