தமிழகத்தில் அரசு விதித்த தடையை மீறி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காடேஸ்வரா சி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளதை இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.

கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது. இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றை எல்லாம் அனுசரித்து பாஜக விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும் அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ள கொரோனா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த 5-ந் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர். இப்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளது வேதனையானது.

பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல் இந்துக்களும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆக.22-ல் ஒன்றரை லட்சம் இடங்களில் திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.

இதை பார்த்த கொரோனா பூச்சி “நான் யார் என்று தெரியுமா, ஒரு நாளில் ஏறக்குறைய 1 லட்சம் புதிய கரோனா கேஸ்கள் பதிவாகின்றன. பல வழிபாட்டு தலங்களில் நான் தலை விரித்தாடுகிறேன். ராம ஜென்ம பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் பயந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். செய்யுங்கள் ராசா. நல்லதுதான் ஏதும் செய்யமாட்டீர்களே. மக்களைப்பற்றி உங்களுக்கு என்ன அக்கறை.” என்று கப்சா நிருபர் கனவில் கூறியது.

“முதலில் கந்தசஷ்டி கவசம் கறுப்பர் கூட்டம் பிரச்சினையில் அமேசான் அட்டைப்பெட்டியில் செய்த வேலை ஹாலில் வைத்து பாவ்லா காட்டி அரசியல் செய்த பாஜக இந்த முறை தெருவில் களிமண் வைத்து செய்யும் கணபதி சிலையை வைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை காண்பிக்கிறது” என்று கப்சா நிருபர் தெரிவித்தார்

பகிர்