கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி அவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்விப்பட்டதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர் மிக சீக்கிரம் குணமாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். நன்றி என தெரிவித்துள்ளார்.

பகிர்