நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோதி. கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் 130 கோடி இந்தியர்களும் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும் என தீர்மானித்துள்ளனர். ஆத்ம நிர்பர் பாரத் (தற்சாப்பு இந்தியா) இன்று 130 கோடி இந்தியர்களின் மந்திரமாகியிருக்கிறது.
கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிப்பு பணிகள், 3 கட்டங்களாக செயல்படுத்தப்படுகின்றன.

அவற்றுக்கு அனுமதி கிடைத்தவுடன் அதை பெரிய அளவில் தயாரித்து, ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்குவதை உறுதிப்படுத்துவோம். அனைத்து இந்தியர்களுக்கும் பிரத்யேக எண் கொண்ட சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். மருத்துவரை ஒவ்வொரு முறை பார்க்கச்செல்லும்போதும் இனி அந்த அடையாள அட்டை உங்கள் மருத்துவ சுகாதார தற்குறிப்பின் அடையாளமாக விளங்கும்.

அனைத்து வீடுகளிலும் குடிநீர் வழங்கல் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு கிராமம், மாவட்டம் என நாடு முழுவதும் அவரவர் வீட்டிலேயே குழாய்களில் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.
வேளாண் துறையில் தன்னம்பிக்கை கொள்ள இந்தியா சமீபத்தில் விவசாயம் மற்றும் விவசாயத் துறைகளுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முயன்று வருகிறோம்.

வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி வறியநிலை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
ஆறு லட்சம் கிராமங்கள் இன்று ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆண்டுக்கு முன்புவரை ஐந்து டஜன் கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளன.

விண்வெளி துறையை இந்தியா தனியார் துறை பங்களிப்பை வழங்க திறந்துவிட்டுள்ளது. இந்திய விண்வெளி வளரும்போது, நாம் மட்டுமின்றி நமது நட்பு நாடுகளும் அதன் மூலம் பலன் பெறும்.
சர்வதேச அளவில் போட்டி போடும் வகையில் சிறார்களை தயார்படுத்த தேசிய கல்விக்கொள்கை, 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டு அது நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற புதிய முறையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய முறையில் ஏற்கெனவே 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்தியர்களின் தாரக மந்திரம் வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது) என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் மேக் இன் இந்தியாவில் (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இருந்து மேக் ஃபார் (வோர்ல்ட் (உலகுக்காக தயாரிப்போம்) என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம்.

அம்பானி அதானி குரூப் மேலும் பணக்காரர்களாக நாட்டு மக்கள் கோவிட் 19ஐ கருத்தில் கொள்ளாமல் மாடு மாதிரி உழைத்து சாகக்கூட தயங்கக் கூடாது என்று கப்சா உரையை முடித்தார்.

பகிர்