மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தான், சிஆர்பிஎப்பின் உயர் கமாண்டோக்களால் பாதுகாக்கப்படும் முதல் பாலிவுட் நட்சத்திரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கங்கனாவின் பாதுகாப்புக்கு யார் பணம் செலுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சிஆர்பிஎஃப் பாதுகாப்பு பெறுவோர் பொதுவாக அரசாங்கத்திடமிருந்து பெறும் பாதுகாப்பிற்கு பதிலாக பணம் செலுத்துவார்கள். கங்கானா ரணாவத் இப்போது பெறும் பாதுகாப்பிற்காக அரசாங்கத்திற்கு பணம் செலுத்த வேண்டுமா, வேண்டாமா என்பது உடனடியாகத் தெரியவில்லை. நாட்டில் தற்போது சிஆர்பிஎஃப் படையினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குழந்தைகளான ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்ட சுமார் 60 முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் மகாராஷ்ரா அரசை குட்டி பாகிஸ்தான் என்கிற அளவிற்கு கடுமையாக விமர்சித்தால் கங்கனா ரணாவத் மற்றும் மகாராஷ்டிரா அரசிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. கங்கனா இதன் மூலம் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோக்களால் பாதுகாக்கப்படும் முதல் பாலிவுட் நடிகை என்ற பெருமையை கங்கனா ரணாவத் பெற்றுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா ஆகியோரும் சிஆர்பிஎஃப் வீரர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். முகேஷ் அம்பானிக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவரது மனைவிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஒய்-பிளஸ் பாதுகாப்பின் கீழ் வந்துள்ளதால் இனி எப்போது கங்கணா ரணாவத்தை 10-11 ஆயுத கமாண்டோக்கள் பாதுகாப்பார்கள்.

சுழற்சி முறையில் 24 மணிநேரமும் அவரை பாதுகாக்க பணியாற்றுவார்கள் வீட்டிலுள்ள பணியாளர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வருபவர்கள் என அனைவருக்கம் கட்டுப்பாடு” இருக்கும் என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார். கங்கனா ரணாவத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு என்பது உளவு அமைப்புகள் அளிக்கும் அச்சுறுததல் தகவலை பொறுத்து அளிக்கப்படும். அப்படித்தான் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது பாதுகாப்பிற்கு செல்லும் கமாண்டோக்களுக்கு எஸ்கார்ட் வாகனம் அளிக்கப்படும்.

சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் ஆவார்கள். அவர்கள் எந்தவொரு நெருக்கடி சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடியவர்கள். இதனால் அவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்க முடியும். மத்திய உளவு அமைப்புகள் அளித்த தகவலின் படி , போதைப்பொருள் கும்பல் மற்றும் பிற கும்பல்களிடம் இருந்து கங்கனா ரணாவத்தின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவருக்கு மத்திய பாதுகாப்பு வழங்குவதற்கான முடிவை இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் வரவேற்றுள்ளதுடன், மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துளளார், கங்கனா ராணவத்தின் சொந்த மாநிலம் இமாச்சலப் பிரதேசம் ஆகும். இதனிடையே கங்கனாவின் பாதுகாப்புக்கு யார் பணம் செலுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பகிர்