இந்திய கலாச்சாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து பெரும் ஆய்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு அந்தக் குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் இல்லாதது பேரதிர்ச்சி அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையி தெரிவித்து இருப்பதாவது:

இந்திய கலாச்சாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து பெரும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, அக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளைச் சேர்க்காது முற்றாகப் புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. வரலாற்று ஆய்வை நடத்துவதற்காக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் வெளியிட்ட 16 பேர் கொண்ட நிபுணர்குழு பட்டியலில் இவ்வாறான புறக்கணிப்புகள் நடந்தேறியிருப்பது தற்செயலானதல்ல.

இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதன் மூலம் அது தெளிவாகிறது. இத்தோடு, மதச் சிறுபான்மையினர்களோ, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, பெண் ஆய்வறிஞர்களோ இடம்பெறவில்லை என்பதும் அதனை மெய்ப்பிக்கிறது. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 16 பேரில் 3 ஷர்மாக்கள், 2 சுக்லாக்கள், 1 சாஸ்திரி, 1 தீட்சித் மற்றும் 1 பாண்டே என 14 ஆரியப்பார்ப்பனர்கள் இடம்பெற்றுள்ளனர் எனும்போதே பாஜக அரசின் உள்நோக்கமும், சதிச்செயலும் தெளிவுபட விளங்குகிறது.

குறிப்பாக இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளிலேயே கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் அதிகமான கல்வெட்டுகளையும், அதேபோல ஓலைச்சுவடிகள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்று வாழ்விடங்கள், அரிக்கமேடு, கீழடி உள்ளிட்ட மிக மூத்த வரலாற்று தொல்லியல் களங்களையும் கொண்டுள்ள நிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், இந்தியாவின் வேறெந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்கு மூவாயிரம் ஆண்டுகாலப் பழமைமிக்க இலக்கண , இலக்கிய வளங்களுடைய நூல்களைக் கொண்ட மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்குடியான தமிழ்ப்பேரினத்தின் வரலாற்றை, தமிழ் மொழியின் தனித்துவமிக்கச் சிறப்பையும், அளப்பெரும் பெருமையையும், தமிழ் மண்ணின் செழுமைமிக்க மரபையும், பண்பாட்டையும் அறியாத, சிறிதும் தொடர்பற்ற ஒரு கூட்டம் வரலாற்றை எழுதுமாயின் அது தமிழர்களைச் சிறுமைப்படுத்தும் வரலாறாகவே அமையும். கீழடி வரலாற்றை மறைக்க முயன்றதுபோல, தமிழர்களின் பெருமைமிக்கத் தொல் வரலாறும் மூடி மறைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான திரிபு வரலாறு உட்புகுத்தப்படும்.

உலகப் பிரமாணச் சங்கத்தின் தலைவராக உள்ள எம்.ஆர்.ஷர்மா, ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானத்தின் துணைவேந்தர் பி.என்.சாஸ்திரி, உள்ளிட்டப் பெரும்பாலான வடமொழிப் பேராசியர்களை வரலாற்று ஆய்வறிஞர் போர்வையில் இந்த நிபுணர் குழுவில் உள்நுழைத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வக்குடிகள், இந்நாடு ஆரியர்களுடையது, ஆரிய மதமே இந்நாட்டின் பூர்வீக மதம், ஆரிய வேத, புராண, இதிகாசங்கள் கூறும் பண்பாடே இந்தியாவின் பண்பாடு என்பதை நிறுவவே மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்தகையப் படுபாதகச்செயலை அரங்கேற்றியுள்ளது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாஜ., கலை மற்றும் கலாச்சார மாநில தலைவியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு, 300 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலைகளை வழங்கினார். நோட்டு, புத்தகம், பேனா போன்ற பொருட்களையும் 200 மாணவர்களுக்கு வழங்கினர்.

மேலும் தமிழ் எங்கள் வேலன் ஹிந்தி நம்ம தோழன் எனும் வாசகம் பொருந்திய டி–ஷர்ட்டையும் வெளியிட்டார். இந்த டி-சர்ட்டில் வேல் படமும் இந்த வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதோடு, பிரதமர் மோடியின் போட்டோ உடன் திருவள்ளுவர், பாரதியார் படங்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

இதற்கு போட்டியாக ‘சைவம் எல்லாம் வேஸ்ட்டு, மான்கறிதான் டேஸ்ட்டு’ என்ற வாசகம் பொருந்திய டிசர்ட் தைக்க மொத்த ஆர்டர் கொடுத்திருப்பதாக சீமான் தரப்பில் இருந்து வரும் கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்