திமுகவினர் எத்தனையோ பொய் வழக்கு போட்டு எங்களை ஜெயிலுக்கு அனுப்பினார்கள். ஜெயிலே எங்களுக்கு தான் கட்டியது- எங்களுக்கு பயமில்லை என்று செயல்பட்டோம் என மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் தனியார் திருமண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

“திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி தேடி வரும். திமுகவில் குடும்ப அரசியல் தான் வரும் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், தற்போது, உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினை நாடினால் தான் திமுகவில் பதவி கிடைக்கும் என்று திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை சுற்றி வருகிறார்கள்

அதிமுகவை ஒழிக்க திமுக பல வேலைகளை செய்தது. என் மீது கூட தி மு க வினர் முன்னர் திமுக ஆட்சியில் பொய் வழக்கு பதிவு செய்து என்னை ஜெயிலில் போட்டனர். ஜெயிலே எங்களுக்கு தான் கட்டியது, எங்களுக்கு ஜெயில் குறித்த பயம் இல்லை. என்று தொடர்ந்து கட்சி பணியினை செய்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கேன்.

2011இல் நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவினர் தான் இப்போது நீட் தேர்வை பற்றி பேசி குறைகூறி வருகிறார் ஸ்டாலின். காவிரி, இலங்கை தமிழர் உள்பட தமிழகத்தில் நடந்த மக்கள் விரோத திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தவை தான். அதிமுக ஆட்சியில் தான் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகிறது. ஆனால் திமுகவின் ஜால்ராவாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன. திமுக ஆட்சியில் மதுரையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாத நிலை இருந்தது .எங்கும் ரவுடியிசம் இருந்தது” என்றார்

மதுரை சொந்த ஊர் என்பதால் பயமில்லை எ1 குற்றவாளி ஜெயலலிதா – சசிகலா இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பன அக்ரஹாரா சிறை ஓகேவா என்றதும் சயனைடு சயன்டிஸ்ட் சிந்தனை சிற்பி செல்லூர் ராஜூவுக்கு மீண்டும் கொரோனா வந்ததுபோல் வியர்த்துக் கொட்டியதாக கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்