திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், விவரமறியா வாரிசு என்ற பெயர்களில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு உறுப்பினர்களை சேர்க்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி நடந்து வருகிறது. இதற்காக விளம்பரங்களை செய்து வருகிறது. இந்நிலையில், திமுகவில் சேர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில், அவர் சென்னை எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் எனவும் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் அட்டை வரிசை எண் ,நாள் விவரம் இருக்க வேண்டும். ஒருவர் பல கட்சியில் உறுப்பினர் ஆக இருந்தால், எப்படி கண்டுபிடிப்பது? வாக்காளர் அடையாள அட்டை எண் இருக்க வேண்டும்? தேர்தல் ஆணையம் ஒப்புதல் பெறுதல் போன்ற வழிமுறைகள் இருக்க வேண்டும்.

கனடா பிரதமருக்கவே ஹிந்தி வேணாம் போடா என்று டீ-ஷர்ட் போட்டவர்கள் ஆச்சே? சும்மாவா டிரம்ப் கூட கட்சியில் சேர்க்கும் திறமை உடையவர்கள் அவர்கள்! ஒசாமா பின் லாடன், ஹபீஸ், மசூத அசார், தாவூத், ஷி ஜின்பிங் ஆகியோரையும் சேர்த்து கொள்ளுங்கள் உங்க குடும்ப அடிமைகள் குஷி ஆவார்கள்.. என்று ஒரு உ.பி. கூறினார்.

அதேபோல் மற்றொரு அடையாள அட்டையில் ‘விவரமறியா வாரிசு’ என்ற பெயரிலும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவரின் தந்தை பெயர் மலிவு அரசியல் மன்னர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், எந்த பெயரிலும், முகவரியிலும் விண்ணப்பித்தாலும் திமுகவில் உறுப்பினராகிவிடலாம் என கிண்டலடித்து வருகின்றனர்.

பின்னர் ஸ்டாலின் நமது கப்சா நிருபருக்கு அளித்த பேட்டியில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களைவிட அதிகம்பேர் திமுகவில் ஆன்லைன் மூலம் இணைந்துள்ளனர். இதில் வாழும் டோனல்ட் டிரம்ப், மறைந்த மைக்கேல் ஜாக்சன் உட்பட உலக பிரபலங்களும் குப்புசாமி, முனுசாமி உள்ளிட்டோரும் அடக்கம் என்றார்.

பகிர்