சென்னையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு 10 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது, அடிமட்டத்தில் கட்சிப் பணிகளை துரிதப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகின்றன.

ஆளுங்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளை தாண்டி, யார் முதல்வர் வேட்பாளார் என்பதே தற்போது அதிமுகவில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சு கட்சிக்குள் நீண்ட காலமாக ஒலித்துவந்தாலும், இது தொடர்பாக அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை விட்டு அதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதையடுத்து, அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கோரி மூத்த அமைச்சர்கள் சிலர் கோரிக்கை வைத்ததாகவும், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டி தங்கமணி, செங்கோட்டையன் வலியுறுத்தியாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருவன:

அதேசமயம், தலைமை கழக உத்தரவை மீறி யாரும் பேசக்கூடாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது எப்படி ராணுவ கட்டுபாட்டுடன் கட்சி இருந்ததோ அதேபோல இருக்க வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். .
சிலவற்றை செயற்குழுவில் பேசி முடிவெடுக்க முடியாது. சிலவற்றை விவாதிப்பது சரியாக இருக்காது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பேசியதாக தெரிகிறது
இந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. எனினும், தற்போது வரை முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை என தெரிகிறது.

இருப்பினும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும். அன்றைய தினம் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்து யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தலைமை கழகத்தில் அறிவிப்பார்கள் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சிலவற்றை செயற்குழுவில் பேசி முடிவெடுக்க முடியாது. சிலவற்றை விவாதிப்பது சரியாக இருக்காது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பேசியது, சில நூறு கோடிகள் கைமாற்றல் நடைபெறும் அதையெல்லாம் பகிரங்கமாக பேச முடியாது. கூவத்தூர் ரிசார்ட் போன்ற இடத்தில் சரக்கு பார்ட்டி வைத்து தான் முடிவு செய்யவேண்டும் என அதிமுக கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்