தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகை குஷ்பு, தி.மு.கவிலிருந்து விலகி 2016-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.
ஆனால், தற்போது தேசிய அரசியலிலும் கவனம் செலுத்தாமல் விலகி இருந்துவருகிறார். இருப்பினும், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு, தற்போது வரை அவருக்கு சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறி குஷ்பு பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் கூடுதலாக பரப்பப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்துவரும் நிலையில் அதற்கு குஷ்பு ஆதரவு தெரிவித்திருந்தார். அதனையடுத்து, அவர் பா.ஜ.கவில் இணைவார் என்று கருத்துக்கு வலுசேர்ப்பதாக இருந்தது. அப்போது, உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டேன்.
பா.ஜ.கவில் சேர்வதாக இருந்தால், நான் ஏன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்? என்று காட்டமாக பதில் அளித்திருந்தார். இந்தநிலையில், குஷ்பு பா.ஜ.கவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள அவர் நாளை ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா படங்களின்போது நடிகைகள் படப்பிடிப்பில் இருந்து அடிக்கடி காணாமல் போவார்கள். பின்னர் காதல் விவகாரத்தில் ஊரை விட்டு ஓடி விட்டனர் என செய்தி வெளியாகும். அல்லது அதிக பணம் கொடுத்த புரொடியூசர் படத்தில் நடிக்க சின்ன தயாரிப்பாளர் படங்களை விட்டு ஓடுவர். அதுபோல் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அதிக பணம் தரும் மோடி கட்சியான பாஜகவிற்கு தாவியுள்ளார்.