சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு கடிதம் பரவியது. இந்நிலையில், நேற்று இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா அளித்த பேட்டியில், “கரோனாவுக்கு முன், அரசியல் கட்சித் தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார். கரோனா காலம் என்பதால் எனது தம்பியின் உடல் நலனே முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருப்பது அவசியம். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து இரண்டு மாதங்களில் தெரியவரும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை ”ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்” என வலியுறுத்தி எழும்பூர் பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு குவிந்தனர்.

இதுகுறித்து ரஜினி வெளியிட்டுள்ள கப்சா டுவிட்டில் ‘ஒரு படம் நடித்தால் 110 கோடி கிடைக்கிறது. கிட்னி செயலிழக்கும் வரை மூணு படம் நடித்தால் கூட 300 கோடி கிடைத்துவிடும். செகண்ட் ஹேண்ட் கிட்னியை வைத்துக் கொண்டு மக்களுக்காக போராட முடியாது அதனால் கடைசி காலத்தில் மகள்களுக்காக சொத்து சேர்த்து வைத்துவிட்டு போகிறேன்’ என்று கூறி உள்ளதாக தெரியவில்லை.

பகிர்