கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் அதிகமாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக்காலம் முடிந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார் சசிகலா.

இந்த சூழலில் நேற்றுமுன்தினம் சசிகலாவுக்கு சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

இதனையடுத்து அவரை விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அதில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை தனியாக கொரோனா வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலையில் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் அளவு 95 இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு கொரோனா தொற்றுடன் இணை நோய்களும் இருப்பதால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார் சசிகலா. இது குறித்து முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் அளித்த கப்சா பேட்டியில், “எததனகோடி சொத்து இருந்தும் சின்னம்மாவால் உடல் நலத்தை வாங்க முடியவில்லை. சொத்தின் வலிமை அவ்வளவு தான். நாம் என்ன செய்கிறோமோ அதன் பலனையும் நாம் அடைந்தே ஆகவேண்டும்.. அம்மாவுக்கு அப்பல்லோவில் கொடுத்த ட்ரீட்மெண்ட் போலவே சின்னம்மாவுக்கும் கொடுக்கப்படும்.

அடுத்த அப்போல்லோ நாடகம் தயார்.. என்ன வித்யாசம்னா இந்த தரவ விக்டோரியா ஹாஸ்பிடல். எல்லாத்துக்கும் எதிர் வினை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் சமூக வலைத்தளங்களில் சின்னம்மாவைப் பற்றி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், மக்கள் எந்த அளவுக்கு அவர் மீது வெறுப்பில் உள்ளனர் என்பதை உணர்த்துகிறது. அதனால் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டோம். சின்னம்மாவை காப்பாற்ற முடியாவிட்டால் அப்பல்லோவில் அம்மாவுக்கு செய்ததுபோல் எம்பாமிங் என தீர்மானமாகி விட்டது. எக்மோ கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சிசிடிவி காமிராக்கள் செயலிழக்க செய்து வைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

பகிர்