ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா, விடுதலையாகி சென்னை திரும்பினார். பெங்களூரு முதல் சென்னை வரை அவருக்கு அவரின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற ஒருவருக்கு இந்த அளவுக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றால், தமிழ்நாட்டின் அரசியல் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியை பொதுநலனில் ஆர்வம்கொண்டவர்கள் முன்வைக்கிறார்கள்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார். மேலும், அங்கு கூடியிருந்தவர்களிடம் சில கருத்துகளை அவர் பேசினார். “அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, இந்தத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன். தொடர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். ஜெயலலிதா நினைவிடம் அவசரமாக மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் செல்வேனா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். பயம் காரணமாகத்தான் காவல்துறையிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

தெய்வ அருளாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் என் அக்கா ஜெயலலிதா ஆசியாலும், கொரோனாவிலிருந்து மீண்டுவந்திருக்கிறேன். ஜெயலலிதா சொன்னதுபோல, எனக்குப் பின்னாலும் அ.தி.மு.க நூறு ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும். அவரது எண்ணத்தைத் தொடர என் வாழ்நாள் முழுவதையும் கட்சியின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்பேன். கட்சி எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம், ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு எழுந்திருக்கிறது.

நம் அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதைக் காப்பது நம் கடமை. எம்.ஜி.ஆர் கட்டிக் காத்து, ஜெயலலிதாவின் வழியில் வெற்றிநடையுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம், சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்துவிடக் கூடாது” என்று பேசினார் சசிகலா.

அப்போது, `நம் பொது எதிரியை தமிழக ஆட்சிக்கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று சசிகலா குறிப்பிட்டார். கட்சிப் பெயரைக் குறிப்பிடாமல் பொது எதிரி என்று அவர் கூறினார்.பொது எதிரி’ என்று அவர் குறிப்பிட்டது தி.மு.க-வைத்தான் என்று பலரும், பா.ஜ.க-வை என்று சிலரும் கூறுகிறார்கள்.

சசிகலா, தினகரன் தரப்பு பா.ஜ.க-வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற போதிலும் பா.ஜ.க-வை வெளிப்படையாக விமர்சிக்கவோ, எதிர்க்கவோ சசிகலா, தினகரன் முன்வர மாட்டார்கள். தினகரன் சிறைக்குச் சென்று வந்ததிலிருந்து பா.ஜ.க-வை அவர் விமர்சிப்பதில்லை. மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வை அவர்கள் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். பொது எதிரி என்று சொல்வதன் மூலம் அ.தி.மு.க தொண்டர்களைக் கவர்வதற்கு சசிகலா நினைக்கலாம்.

அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருக்கிறது என்ற கோபமும் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களிடம் இருக்கிறது என்ற கருத்து அரசியல் அரங்கில் வைக்கப்படுகிறது. ஜெயிலில் இருந்து வந்ததும் கையுமாக தொட்டுத் தாலி கட்டிய கணவன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தாமல், சொகுகுசு பங்களாவிலும் நட்சச்சிர ஓட்டல்களிலும் டேரா போட்டுக் கொண்டு பதவி வெறியில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் சசிகலா என கப்சா நிருபர் தெரிவித்தார்.

பகிர்