சினிமாவில் அனைவரையும் ஜெயித்த சிவாஜி கணேசன் அரசியலில் தோற்று போய்விட்டார் என்று பரவலாக சொல்வது உண்டு… ஆரம்பத்தில் திராவிடர் இயக்கத்தின் பரிச்சயமும், ஃபேமஸ் ஆன முகமும் சிவாஜி கணேசன்!!
ஒருநாள் திருப்பதி போய் வந்தார் சிவாஜி.. அவ்வளவுதான்… இந்நிகழ்வு பெரிய சலசலப்பை ஏற்படுத்த, 1961-ல் காங்கிரஸில் தன்னை இணைத்து கொண்டார் சிவாஜி. அளவுக்கு அதிகமாக நேருவையும், காமராஜரையும் விரும்பினார். பற்று வைத்த நேரு மறைந்ததும், காமராஜர்தான் தனக்கு அனைத்தும் என்றே இருந்தார்.
1967ல் காமராஜ் தோற்றபோதும் சரி, 1969ல் காங்கிரஸ் 2-ஆக பிரிந்தபோதும் சரி, காமராஜரை தவிர வேறு யாருக்குமே தன் மனதில் கொஞ்சம்கூட இடம் தரவில்லை… காமராஜரின் மறைவுக்குப் பின்தான் எல்லாமே மாறியது. கருத்து வேறுபாடு கொண்டு, காங்கிரசை விட்டு வெளியே, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை தொடங்க.. 1989 சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் நின்று தோற்று போக… இப்படியே அவரது அரசியல் நகர்ந்தது.
தனது கட்சிக்காக சொத்துக்களை அதிக அளவு இழந்தவர் சிவாஜி கணேசன் என்றுகூட அப்போது பேசப்பட்டது. ஆனால் இப்போது கூட தமிழக காங்கிரஸ் என்றாலே காமராஜருடன் இணைந்து நம் மனக்கண் முன் வருவது சிவாஜி கணேசன்தான் என்பதை மறுக்க முடியாது!!
சிவாஜி இருந்தபோதும் சரி, தற்போதும் சரி.. அவரது குடும்பத்து சார்பாக யாருமே எந்த கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டதில்லை… தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவானாலும் சரி, மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே அந்த குடும்பத்துக்கு ஒன்றுதான்.. ஒரே மாதிரிதான்.. இந்திய அரசியல், இந்திய சினிமா என்ற உலகில் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சிவாஜி குடும்பம் பலவருட காலத்துக்கு ஒன்றுபட்டே, ஒரே குடும்பமாகவே தன்னை ஐக்கியபடுத்தி கொண்டு வருகிறது… இது மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க விஷயம்.
ஆனால், கடந்த வருடம்தான், திடீரென பிரபு காங்கிரஸில் இணைய போவதாக ஒரு செய்தி கிளம்பியது.. மறைந்த வசந்தகுமார் இதற்காக பேசி வருவதாகவும், ராகுல் முன்னிலையில் பிரபு கட்சியில் சேர போவதாகவும், சிவாஜி விட்ட இடத்தை பிரபு வந்து நிரப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் ஒரு செய்தி வந்தது.. ஆனால், எடுத்த எடுப்பிலேயே பிரபு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, “காங்கிரஸ் கட்சியில் அப்பா இருந்தாருங்க.. அவர் இருந்தார் என்பதற்காக நானும் அதில் போய் சேர வேண்டுமா என்ன?” என்று யதார்த்த கேள்வியையும் பிரபு கேட்டிருந்தார்.
ஆனால், இன்று ராம்குமார் பற்றின பேச்சு எழுந்துள்ளது.. இதே ராம்குமாரை ஏன் காங்கிரஸ் அணுகவில்லை? எந்த கட்சியில் சேர வேண்டும் என்பது தனிநபர் விருப்பம்தான்.. அது ராம்குமாரின் விருப்பமும்தான்.. ஆனால், பாஜக தலைவர்களுடன் ராம்குமார் சில தினங்களாக இது தொடர்பாக பேசி வந்துள்ளார்.. இந்த விஷயத்தை அறிந்து காங்கிரஸ், அவரை முன்னதாகவே தடுத்து நிறுத்தி இருந்திருக்கலாம்.. அல்லது ஒரு பேருக்காவது தங்கள் கட்சியில் இணையும்படி வலியுறுத்தி இருக்கலாமே? என்ற சந்தேகம் எழுகிறது.
ராம்குமாரின் முடிவு சிவாஜி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது… உயிர் பிரியும் வரை காங்கிரஸின் தொண்டனாக இருந்த ஒருவரின் மகன் இப்படி செய்யலாமா என்று ஏமாற்றத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர் தொண்டர்கள்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, ராம்குமார் ஏன் பாஜகவில் இணைந்தார்? இத்தனை வருஷமாக மோடி பிரதமராக இருக்கிறார்.. ஆனால், இன்றைக்கு வந்து மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்.. இதுதான் இடிக்கிறது.. இதுவரை மோடி பற்றி பாராட்டியோ, விமர்சித்தோ ஒரு அறிக்கை, ட்வீட், கருத்து எதுவுமே சொன்னதில்லை ராம்குமார்..
திடுதிப்பென்று ஒரு கட்சியை பாராட்டிவிட்டு, அடுத்தநாளே அந்த கட்சிக்குள் இணைவதன் பின்னணி உடனடியாக தெரியவில்லை. ஏதேனும் நெருக்கடியா? நிர்பந்தமா? அவசியமா? விருப்பமா? எதுவுமே தெரியவில்லை. ஆனால் ஒன்று, சிவாஜியால் எம்ஜிஆர் ஆக முடியாது என்பதை சிவாஜியே தெளிவாக நிரூபித்து விட்டுப் போய் விட்டார்.. இனி இவர்கள் எதை நிரூபிக்க போகிறார்கள்? என்று இனிமேல்தான் தெரியும்..!
‘நாதாரிபயலுக்கு சோம்பேறிப்பய கூட்டு’ என்றார் கப்சா நிருபர்.