புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை செளந்தர்ராஜனுக்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில் அவர், “மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், இன்று (18.2.2021) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) பதவியேற்றமைக்கு, எனது சார்பாகவும், தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.”

தமிழிசை கவர்னராக இல்லாதபோது கண்டபடி மீம்களில் கிண்டல் செய்யப்பட்டார். அப்போது எடப்பாடி முதல்வர் பதவியிலும் இல்லை. ஜெயாவிற்கு குனிந்து கும்பிடு போட்டுக் கொண்டு காலம் தள்ளிக்கொண்டு இருந்தார். தற்போது பாஜகவிற்கு சொம்படித்துக் கொண்டு முதல்வராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவிற்கு கும்பிடு போட்டதுபோல், பாஜக ஆதரவில் பக்கத்து யூனியன் பிரதேசமான பாண்டியில் கவர்னராக பொறுப்பேற்றுள்ள தமிழிசைக்கும் கும்பிடு போட வேண்டும் என எடப்பாடிக்கு மோடி ரகசிய உத்தரவிட்டுள்ளதாக கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்