தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெங்களூருவில் இருந்து தமிழக எல்லையை அடைந்ததுமே தீவிர அரசியல் ஈடுபடப் போவது உறுதி என்று அறிவித்த சசிகலா, இன்று அரசியல் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.
சிறை செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்துவிட்டு சென்ற சசிகலாவின் வருகைக்குப் பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று கூறி வந்தவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மீதான ஆதரவு நிலைப்பாட்டிற்கு ஓபிஎஸ் சென்றாலும், சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ள முடியாது என்பதில் திட்டவட்டமாக இருந்தார்.
தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளுடன், சசிகலா சார்ந்திருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளையும் பெற்றால் எளிதாக வெற்றி பெற்று விடலாம். இல்லயென்றால் தென் மாவட்டங்களில் திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று விடும். அதற்கு சசிகலா, டிடிவி தினகரன் இணைப்பு கட்டாயம் நடைபெற வேண்டும் என்று பாஜக எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும் எடப்பாடி அசைந்து கொடுக்கவில்லை. அமித் ஷா வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் கூட மோடியிடம்தான் இதைப்பற்றி பேசி விட்டதாகவும், சசிகலாவை சேர்த்துக் கொள்ள முடியாது என்றே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
கடைசிவரை எடப்பாடி மிகத்தெளிவாகவே பாஜகவின் அழுத்தத்திற்கு இடங்கொடுக்காமல் சசிகலா இணைப்பு அதிமுகவிற்கு பின்னடவையே தரும் என்று தெளிவாக ஒற்றை முடிவில் இருந்தார். ஒரு கட்டத்தில் பாஜகவும் கை விரித்து விட்டது. சசிகலாவுக்கு வேறு வழி இல்லாததால் அரசியலில் ஒதுங்கும் முடிவை எடுத்திருக்கிறார். இது எடப்பாடியாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
கப்சா நிருபர் விசாரித்ததில், ஓட்டுக்கள் பிரியாதிருக்க அரசியலை விட்டுகிறாயா, ஜெயிலுக்கு போறியா? என பாஜக தரப்பு சசிகலாவை மிரட்டியதாகவும் சங்கிகள் முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக வந்துவிட்டதாகவும் தெரிகிறது.