சட்ட மன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்தால் குடும்பம் ஒன்றுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்ததாக சில அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
அதில், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டு தோறும் 6 சிலிண்டர்களை இலவசமாக வழங்கப்படும் என்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அறிவிக்கவிருந்த தேர்தல் அறிவிப்புகள் கசிந்து விட்டதால், திமுக அதை அறிவித்துவிட்டதாக கூறினார்.
மேலும், அதிமுக – அமமுக இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார். முன்னதாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் (எடப்பாடி) கூட்டத்தில் ஏற்கனவே செட் அப் செய்யப்பட்ட திமுகவின் கப்சா குடிமகன் எழுந்து, அதிமுக ஆட்சிக்காலத்தில் சிலிண்டர் விலையில் ஐம்பது ரூபாய் குறைக்க வக்கில்லை, தேர்தல் வந்ததும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆறு சிலிண்டர் தறீங்களா? வெக்கமாயில்லை? என்று கத்தினார். இவ்வாறு கப்சா செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.