அதிமுக- வின் தேர்தல் அறிக்கையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வெளியிட்டனர்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்:
- அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும்.
- அம்மா இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
- வீட்டில் ஒருவருக்கு அரசு பணி
- கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- விலையில்லா கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்படும்
- இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
- தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்
- மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை.
- மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்
- நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்
- ரூ.25,000 மானியத்தில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ
- மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.
- காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
- இந்து ஆன்மிக பயணம், ஹஹ் ஜெருசலேம் பயணத்துக்கான கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.
- மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டப்படும்.
- கிராம பூசாரிகளுக்கான ஊக்க ஊதியம் உயர்த்தப்படும்.
- மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு பழைய சலுகையே தொடரும்.
- நெசவாளர்களுக்கு ரூ 1 லட்சம் வரை கடன் தள்ளுபடி.
- பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ரூ. 2,500 ஆக உயர்வு.
- அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடன்.
- வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும்.
- மாவட்டந்தோறும் மினி ஐ.டி. பார்க் நிறுவப்படும்.
- பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.
- நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்
- கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா.
- பள்ளி மாணவர்களுக்கு தினமும் 200 மி.லி. பால் அல்லது பால் பவுடர் வழங்கப்படும்.
- ஏழை, எளிய மக்களுக்கான சுலபத்தவணைத் திட்டத்தில், வட்டியில்லா கடனுதவி தரும் அம்மா பேங்கிங் கார்டு மூலம் கடனுதவி.
- கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை.
- குல விளக்கு திட்டத்தின் கீழ் ரூ 1,500 கணக்கில் செலுத்தப்படும்
திமுக நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தநிலையில், இன்று காலை திமுக தலைவர் ஸடாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து மரியாதை செய்தார். அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் 500 திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை அறிவிக்கிறோம்” என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
- அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குக்குத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
- ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
- பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்.
- சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
- கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது.
- சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக டி.வி-யில் ஒளிபரப்பு.
- இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய்ஒதுக்கீடு.
- தேவாலயங்களைச் சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.
- தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்.
- விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
- பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.
- கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
- மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ. 24,000-ஆக உயர்வு.
- மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
- பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்.
- கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.
- மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும்.
- பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படும்.
- உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.
- கூட்டுறவு நகைக் கடன் 5 பவுன் வரை தள்ளுபடி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி.
- பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.
- வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
- திமுக-வின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்
- 26.நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு.
- 200 தடுப்பணைகள் அமைக்கப்படும்.
- நகரங்களில் ஆட்சேபம் இல்லாத இடங்களில் வீட்டுப் பட்டா.
- நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்.
- சிறு, குறு விசாயிகளின் மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்.
- கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சைபர் காவல் நிலையங்கள் செயல்படுத்தப்படும்.
- 34.மீனவர்கள், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.
- பொங்கல்விழா மாபெரும் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்படும்.
- பெண்கள் இட ஒதுக்கீடு 40%-ஆக அதிகரிக்கப்படும்.
- ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
- உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
- மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
- இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்.
- அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி பணி நியமனம்.
- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவர்.
- அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
- நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்.
- புதிய நீர்வள அமைச்சகம் உருவாக்கப்படும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்.
- பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
- அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.
- 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்.
கருமம்! வரிக்கு வரி திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து காப்பியடித்து அப்படியே போட்டிருக்கிங்களே… வெட்கமாக இல்லையா எடப்பாடி… என்கிறார் நமது கப்சா நிருபர்.. தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவேண்டும். . அவைகளை நடைமுறைப்படுத்த அரசு தவறினால் தேர்தல் செல்லாது என்று அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும், அப்போதுதான் பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றும் வேலை நடக்காது .2014 ல் கருப்பு பணத்தை கொண்டு வருவதாகச் சொல்லி பாஜக ஆட்சிக்கு வந்தது இதுநாள் வரையில் ஒரு டாலர் கூட கொண்டு வரவில்லை. என்கிறார் நமது கப்சா நிருபர்..