மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்திக்கு வாக்கு கேட்டு, மலைக்கோட்டை பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில், லேடியா? மோடியா? என ஜெயலலிதா பேசினார். நான் இப்போது கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா? என மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும் எனறு கூறினார்.
கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாக அரசியல் கட்சிகள் பாதுகாக்கின்றன. அதனால்தான் ஏழ்மையின் மீது எனக்கு கோபம் இருக்கிறது. நேர்மை என்பது பசி போல் தினமும் இருக்க வேண்டும். நேர்மையோடு வாழ வேண்டும்.
உதயநிதி தயாரிப்பில் நான் நடித்துள்ளேன். அவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதற்காக நான் ஊழல் செய்து விடுவேனா? அது வேறு இது வேறு. தமிழில் வசனம் எழுத ஆள் இல்லாததால் வட நாட்டிலிருந்து, தேர்தல் வெற்றிக்காக ஒரு ஆளை அழைத்து வந்துள்ளார்கள்.
என்னை பீ டீம் என பரப்பியது தி.மு.க தான். நான் ஒருவருக்கு பீ டீமாக இருப்பேன் என்றால் அது காந்திக்கு தான். தி.மு.க வெற்றி பெற்றால் அவர்களும் மத்திய அரசுக்கு கை கட்டி இருப்பார்கள். லேடியா? மோடியா? என ஜெயலலிதா பேசினார். நான் இப்போது கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா ? மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும்.
ரெய்டு விட்டால் மக்கள் நீதி மய்யத்யின் மீதும் கமல்ஹாசன் மீது விடுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது விடாதீர்கள். இலவசங்கள் உங்கள் ஏழ்மையை போக்கவே போக்காது. நான் மீன் பிடிக்க கத்து தருகிறேன். நேர்மையின் மீட்சிக்காக நாங்கள் ஆட்சியை பிடிக்க விரும்புகிறோம்” என்றார்.
கமல் பேசி முடித்ததும் கூட்டத்தில்லஇருந்த பெண் ஒருவர் அவரை நோக்கி ஏதோ பேசினார். கமல் சைகையால் பதில் சொல்ல, கோபடைந் அந்த பெண் கூச்சலிட்டபடி கையில் வைத்திருந்த புத்தகங்களை கமலை நோக்கி வீசினார். அவரை பாதுகாப்பிற்கு வந்த தனியார் பவுன்சர்களும், மநீம தொண்டர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் உரக்க முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இவற்றை படம் பிடிக்க விடாமல், பதிவு செய்ய விடாமல், பத்திரிகையாளர்களைத் தடுத்து, பவுன்சர்களும் மநீமவினரும் தாக்க முயற்சித்தனர். இதனால் பத்திரிகையாளர்கள் கட்சியினர் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருவழியாக மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, கமலைச் சந்தித்து சில முறைகேடுகள் குறித்து பேசவும் வந்தேன். என்னை விடவில்லை. என் கருத்தை கமலிடம் கத்தி சொன்னதற்கு, இதையெல்லாம் சொன்னால் உன்னை கிறுக்கு என்பார்கள் என்றார். என் பெயர் சீதா திருச்சி ஆர்.எஸ்.புரம் என்றார்.
நான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளேன். அங்கு நிறைய முறைகேடுகள் நடக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணத்தை கொடுத்து சான்றிதழ் வாங்கி வேலையில் சேருகிறார்கள். தலைவரைப் பார்த்து வாக்களிக்க வேண்டும். எனவே மநீமவிற்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்காளிக்க வேண்டும் என்று முன்னுக்குபின் முரணாக பேசினார்.
பின்னர் அவரை பப்ளிசிட்டிக்காக இப்படி பண்ணாதீர்கள் என்று சொல்லி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அந்த பெண் பப்ளிசிட்டிக்காக திட்டமிட்டு இப்படி செய்தாரா? மன நலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.