முதல்வரை இழிவுபடுத்தும் விதமாக, தரக்குறைவாக பேசிய, நீலகிரி எம்.பி., ராசா, ஊட்டியில் நிருபர்கள், கட்சியினர் முன்னிலையில், நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார். தி.மு.க., துணை பொதுச் செயலரும், நீலகிரி எம்.பி.,யுமான, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, 26ம் தேதி, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் இ.பி.எஸ்., தாயை தரக்குறைவாக பேசினார்.இது, தமிழகம் முழுதும் பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊட்டியில் நேற்று ராசா அளித்த பேட்டி: முதல்வர் இ.பி.எஸ்., பற்றி நான் பேசியது குறித்து, சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் குறித்து, இரண்டு நாட்களுக்கு முன், பெரம்பலுாரில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் விளக்கமளித்தேன். அதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆளுமையையும், முதல்வரின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி, உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன், அரசியல் காரணங் களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன்.இதன்பின்னும், ‘முதல்வர், என் பேச்சால் காயப்பட்டு கலங்கினார்’ என்ற செய்தியை, நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். என் பேச்சுக்காக, என் அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் ஒருபடி மேலே போய், முதல்வர் இ.பி.எஸ்., அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டதாக உணர்வாரேயானால், என் மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில், எனக்கு சிறிதும் தயக்கமில்லை.முதல்வருக்கும், அவரது கட்சியினருக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, என் பேச்சு, இரண்டு தலைவர்களை பற்றிய தனி மனித விமர்சனம் இல்லை. ஆயினும், முதல்வர் காயப்பட்டு கலங்கியதற்காக,என் மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கிறேன். இவ்வாறு ராசா கூறினார். ராசாவின் பேச்சால், சேலம் மாவட்டத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக பெண்கள் கொதித்தெழுந்தனர். இடைப்பாடியில், நேற்று முன்தினம் யாருமே எதிர்பாராத வகையில், 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டது, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதைப் பார்த்து, தி.மு.க.,வினர் மிரண்டு போயினர்.
குறிப்பாக, அத்தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் செல்வகணபதி, அங்கு நடந்த போராட்டத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, ‘அப்டேட்’ செய்து கொண்டிருந்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த, தி.மு.க., – காங்., பிரசார கூட்டத்தில், ராகுல், ஸ்டாலின் பங்கேற்றனர். ராகுல் கிளம்பிய பின், பொதுக்கூட்ட திடலிலேயே ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர்களான செல்வகணபதி, ராஜேந்திரன், சிவலிங்கம் ஆகியோருடன், 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

அதே நேரத்தில், முதல்வர் இ.பி.எஸ்., சென்னை பிரசாரத்தில், தன் தாய் பற்றி, ராசா பேசிய பேச்சை குறிப்பிட்டு, கண் கலங்கினார். இது, தமிழகம் முழுதும் அதிர்வை ஏற்படுத்தியது. இதையடுத்தே, இடைப்பாடியில் திடீர் பிரசாரம் செய்ய, ஸ்டாலின் முடிவு செய்தார். இடைப்பாடி தி.மு.க., வேட்பாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளருடன் இடைப்பாடிக்கு புறப்பட்டார்.அவர் கிளம்பிய பின் தான், இடைப்பாடி தி.மு.க.,வினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவசர அவசரமாக, தி.மு.க., வினர் கூட்டம் சேர்த்தனர். பொதுக்கூட்ட மேடையில் இருந்து கிளம்பிய ஸ்டாலின், கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்ற பின் தான், உள்ளூர் போலீசாருக்கு, அவர் இடைப்பாடி செல்வது தெரிந்தது. தொடர்ந்து, போலீஸ் மைக்குகளும் அலறத் துவங்கின..இடைப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, கொங்கணாபுரம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியின் முக்கிய வீதிகளில், ஸ்டாலின் நடந்து சென்று ஓட்டு சேகரித்தார். ஜலகண்டாபுரம், நங்கவள்ளியில் பெண்களிடம் ஓட்டு கேட்டார். சிலரது குடிசை வீட்டுக்குள் சென்று ஓட்டு கேட்ட போது, பெண்கள் அதிருப்தியில் இருப்பதை தெரிந்து கொண்டார். கள நிலவரத்தை நேரடியாக பார்த்த ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார்.
பின், அங்கிருந்து தர்மபுரி வழியாக, ஸ்டாலின் ஆம்பூர் சென்றார். ஆம்பூரில் இருந்தபடி, ராசாவை தொடர்பு கொண்ட ஸ்டாலின், உடனே மன்னிப்பு கோரும்படி தெரிவித்தார். ‘எப்படி பேச வேண்டும் என்ற டிராப்ட் அனுப்பப்படும்; அதை மட்டும் கூறினால் போதும்’ என்ற கட்டளையும் பிறப்பித்தார்.இதன்படியே, ஊட்டியில் தங்கியிருந்த ராசா, நேற்று காலை, நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
நீலகிரி தொகுதி எம்.பி., அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், எழுதி வைத்திருந்த பேப்பரில் என்ன இருந்ததோ அப்படியே படித்து காட்டினார். அவரிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கையுடன், அவசர அவசரமாக, சென்னை புறப்பட்டு சென்றார்.ஆயினும், முதல்வரின் தாய் குறித்து ராசா பேசியதால், பெண்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பையும், அதிர்ச்சியையும் இன்னமும், தி.மு.க., வால் சரி செய்ய முடியவில்லை.
மேலும், ‘2ஜி ஊழல் வழக்கில் சிக்கி, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு வேட்டு வைத்த ராசா, 2021 தேர்தலிலும், முதல்வரின் தாய் குறித்து ஏடாகூடமாக பேசி, தி.மு.க., வுக்கான பெண்கள் ஓட்டு வங்கியில், ‘ஓசோன்’ படலம் அளவுக்கு ஓட்டையை போட்டு விட்டார்’ என, தி.மு.க.,வினரே புலம்புகின்றனர். சென்னை:”மன்னிப்பு கோருகிறேன் என்று ராசா கூறுவது, மிகப் பெரிய நாடகம்; அவரை, முதல்வர் மன்னித்தாலும், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,” என, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பா.ஜ., வேட்பாளர்களுக்கு, பொது மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று, அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்கும்.
அராஜகம், ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து தலைதுாக்கும் என்பதால், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில், மக்கள் கவனமாக உள்ளனர். பொய்கள் மட்டுமே பேசும் ஸ்டாலினை, மக்கள் ஏற்க தயாராக இல்லை.தி.மு.க., – எம்.பி., ராசா, தரமில்லாத கருத்துகளை பேசிவிட்டு, ‘முதல்வர் கண் கலங்கினார் என்பதால், மன்னிப்பு கோருகிறேன்’ என்று கூறுவது கூட, மிகப் பெரிய நாடகம். முதல்வர் மன்னித்தாலும், தமிழக மக்கள், ராசாவை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். ‘தேர்தல் விதிகளை மீறி பேசிய ராசா மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாரம் செய்ய, தடை விதிக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், புகார் அளிக்கப்பட்டது.அந்த மனுவை, தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி.,க்கு அனுப்பினார். அதன் அடிப்படையில், போலீசார், மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ், ராசா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ராசா பேச்சு அடங்கிய வீடியோ; அவர் பேச்சு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரான, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் அளித்த அறிக்கை; போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை விபரங்கள் ஆகியவற்றை, தேர்தல் கமிஷனுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனுப்பி உள்ளார். முதல்வர் இ.பி.எஸ்., தாயை பற்றி அவதுாறாக, தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராசா பேசிய விவகாரம், கிராம மக்களிடம் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது என்பதற்கு, இதோ ஒரு உதாரணம்.திருநெல்வேலி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், உடையார்பட்டி பகுதியில், நேற்று ஓட்டு சேகரித்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த இடத்திற்கு வந்த ஏராளமான பெண்கள், ஆவேசமாக சத்தம் எழுப்ப, கூட்டத்தின் கவனம், அந்த பக்கம் திரும்பியது. ‘முதல்வர் இ.பி.எஸ்.,சை பத்தி ஆயிரம் பேசட்டும். ஆனால், செத்துப் போன அவரோட அம்மாவை கொச்சைப்படுத்தி ஏன் பேசணும்? பொம்பளைங்க அவ்வளவு இளக்காரமா? இந்த ராசா முதல் முறையாக, இப்படி பேசவில்லை.’ஏற்கனவே, பலமுறை இப்படி பேசியிருக்காரு. இப்படி பேசியதற்கு நியாயப்படி, கட்சி தலைமை கடும் நடவடிக்கை எடுத்திருக்கணும்.
‘பெண்களை கேவலமா பேசிட்டு, இப்ப எந்த முகத்தை வச்சிக்கிட்டு, ஓட்டு கேட்டு வர்றீங்க’ என, கொந்தளித்துள்ளனர்.பெண்கள் சத்தம் பற்றி லட்சுமணன் விசாரிக்க, ‘அது வேற ஒண்ணுமில்ல. ரேஷன் அரிசி கருப்பா இருக்குதாம்’ என, உடனிருந்தவர்கள் சொல்லி சமாளித்தனர். தி.மு.க., – எம்.பி., ராசாவுக்கு எதிராக, நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. சென்னையில், -பல இடங்களில் ராசா உருவ பொம்மை எரிக்கப்பட்டது.சென்னை, ராயபுரம் பகுதி அ.தி.மு.க., செயலர் அரசு தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, ராசா உருவ பொம்மையை எரித்தனர். ஓட்டேரியில், மகளிர் அணியினர், ராசா உருவ பொம்மையை, பாடை கட்டி, ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. பின், தள்ளுமுள்ளாக மாறியது.
புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லுாரி சாலையில், அ.தி.மு.க.வினர், ராசாவை கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓட்டேரி மேம்பாலம் அருகே, ராசா உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர். சிறிது நேரத்துக்கு பின், அவர்கள் மீண்டும் வந்து, உருவ பொம்மையை கொளுத்தினர். அதை தடுக்க முயன்ற, சப் – இன்ஸ்பெக்டர் மீனாவுக்கு, லேசான காயம் ஏற்பட்டது.
ஆவடி புதிய ராணுவ சாலையில், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் தலைமையில், ராசா உருவ பொம்மையை எரித்தனர்.இதுபோல், தமிழகம் முழுதும், பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. மன்னிப்புக் கேட்கும் கடிதத்தில் மிகவும் சாமர்த்தியமாக கோர்க்கப்பட்ட வார்த்தைகள் வெளிப்படையாக இல்லை.. நீங்க என்ன தான் இத காரணமாக வச்சி திமுக வ தோற்கடிக்கலாம் என்று நினைத்தீர்களானால் அது நடக்காது எங்கள் தலைவர் தளபதி தாண் அடுத்த முதல்வர்.ஆயிரம் பெண்கள் சித்திரவதைக்குள்ளானார்கள்.. பலநூறு பெண்கள் தற்கொலை செய்து மாய்ந்தார்கள்.. உயர் பெண் போலீஸ் அதிகாரிக்கே பாலியல் கொடூரம்..
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “திமுக காங்கிரஸ் கூட்டணியினர், முதல்வரின் தாயாரை அவமானமாகப் பேசி உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை இன்னும் இழிவு படுத்துவார்கள். பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிர்வாகிகளை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்து உள்ளனரா? “பெண்களை அவமானப்படுத்துவதே திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம். சில நாட்களுக்கு முன்னர், திண்டுக்கல் லியோனி, பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அவரை திமுக தடுக்கவில்லை. திமுகவில் மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டியுள்ள இளவரசர், பெண்களை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசினார். அவரையும் திமுக தடுக்கவில்லை. ஜெயலலிதாவை, சட்டசபையில் திமுக தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது,” என்றும் அவர் கூறினார்.
போலீஸ் துறையில் பெண் போலீசாருக்கு நித்தமும் பாலியல் சித்திரவதை (மலர் செய்தி).. அத்தனையும் அப்பிரிக்காவிலா நடந்தது.. பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. அதை இரும்புக்கரம் கொண்டு நிறுத்த வீரமில்லை.. லஞ்சம், பதவி வெறி, லஞ்சம், துரோகம், லஞ்சம், காலில் விழுந்தாவது பதவி – இதை தவிர எந்த நிர்வாக திறனும் இல்லை.. பதவிக்கு வந்தது எப்படி? அதைப்பற்றிய விமர்சனத்தை திரித்து தனது தாயை பழனிசாமியே களங்கப்படுத்திக் கொள்கிறார்.. பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும், சமாளிக்கும் திறமை உண்டு இல்லையா.. அதை தான் நிரூபிக்கிறார் பழனிசாமி. தில்லுமுல்லு கட்சியின் இன்றைய ஆபாசப்பேச்சுக்கள் இத்துடன் நிறைவு பெறுகின்றன… அடுத்த ஆபாசப்பேச்சுக்கள் மீண்டும் நாளை தொடரும்…