எழுதி வெச்சுக்குங்க.. இன்னும் 10 வருஷங்களுக்கு பிறகு ஸ்டாலின்தான் பிரதமர் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. இதற்கு நடுவில் சுடச்சுட கருத்து கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில் திமுகவுக்கு ஆதரவாகவே பல கணிப்புகள் வருகின்றன. எனினும், கடைசி கட்டத்தில் எந்தவிதமான அசால்ட்தன்மையும் வந்துவிடகூடாது என்று திமுக தரப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியே வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி, திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து, வேலம்பட்டியில் துரைமுருகன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற கோஷத்தை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியா, பல்வேறு இனம், மொழி, கலாசாரம், கடவுள் வழிபாடு கொண்ட நாடு. உண்டு.

இவற்றை அழிக்க ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அந்த சூழ்ச்சியை முறியடிக்க ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். மத்திய அரசை எதிர்க்க, ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கருணாநிதியிடம் பெற்றவர் ஸ்டாலின். கருணாநிதியைப்போல மத்திய அரசை எதிர்த்தவர்கள் யாரும் இருக்க முடியாது. எதிர்க்கும் இரும்பு இதயம் கொண்டவர் ஸ்டாலின் என்பதால் அப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்தில் அமர்ந்தால்தான் கலாச்சார படையெடுப்பை தடுக்க முடியும்.

எந்த கட்சியில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் தமிழன்தான். எனவே தமிழை காக்கின்ற கட்சிக்கு நீங்கள் வாக்களியுங்கள். தமிழையும், தமிழனையும் காப்பாற்ற ஸ்டாலினை விட்டால் வேறு யாரும் இல்லை. அதனால்தான் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

திமுக ஆட்சியில், 10 வருஷத்துக்கு முன்பு வழங்கிய, டிவி இன்னைக்கும் ஓடுது.. ஆனால், இந்த ஆட்சியில் வழங்கிய ஃபேன், மிக்சி, கிரைண்டர் எதுவுமே இப்போ ஓடல.. தரமற்ற அரசு என்பதற்கு இது ஒரு உதாரணம். எழுதி வெச்சுக்குங்க.. ஸ்டாலின், இந்த 10 வருஷத்துக்கு மட்டும் முதல்வராக இருப்பார். அதுக்கு பிறகு, பிரதமராகி விடுவார்… அந்த அளவுக்கு, அவரிடம், நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

இதை கப்சா நிருபர் வாட்சப்பில் பிரதமர் மோடிக்கு அனுப்பினார். உடனே ‘பாண்டி டெரர் லேடி’ கிரண்பேடிக்கு போன் செய்த மோடி தமிழகத்தில் கவர்னர் பதவியற்க தயார் நிலையில் இருக்கும்படி கூறியுள்ளார். சப்போஸ் தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் வந்துவிட்டால், பாண்டிச்சேரியில் முதலமைச்சர் கண்ணில் விரல் விட்டு ஆட்டியதுபோல் கேட்டரேக்ட் வந்த ஸ்டாலின் கண்ணில் கிரண் பேடியின் லேடிஸ் ஃபிங்கரை விட்டு ஆட்டுவேன் என மோடி கோபமாக கூறினார்.

பகிர்