தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரமும்; கரோனா நோயாளிகளுக்காகக் கவச உடையுடன் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்ட தேர்தலும் இதுதான். சில மாவட்டங்களில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணைய இறுதி நிலவரம் நேற்றிரவு 8 மணிக்கு வெளியானது. ஆனாலும் முழுமையான வாக்குப்பதிவு நடைமுறைகள் முடிந்தப்பின்னரே இறுதி நிலவரம் நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியாகும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்று காலையில் முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது. இதில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சதவீதம் தனித்தனியாக வெளியாகியுள்ளது.

இதில் தமிழகம் முழுவதும் 72.78 சதவீதம் பதிவானதாக அதிகாரபூர்வமான தகவலாக வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக-வினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் ‘‘அதிமுக- பாஜகவின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் கழகத்தினரும், கூட்டணித் தோழர்களும் ஆற்றிய தேர்தல் பணி போற்றுதலுக்குரியது. பணி தொடர்கிறது.

EVM உள்ள மையங்களை இரவு பகல் பாராது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாத்திட வேண்டும். அது நம் தலையாய கடமை’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காக வாக்குப்பெட்டிகள் உள்ள பகுதிகளில் கள்ள ஓட்டு போட வந்தவர்களால் லாட்ஜ்கள் நிரம்பி வழிகிறது. அண்ண பல்கலைக் கழக வளாகத்திலும் ரூம் பாய்கள் அமர்த்தப்பட்டு கட்சி வாரியாக கண்காணிக்க வந்தவர்களுக்கு பீடி சிகரெட் தண்ணி சப்ளை நடக்கிறது.

பாஜக பெட்டி மாற்றுவது தெரியாமல் 24 மணிநேரமும் வாக்கு எந்திரங்களை கண்காணிக்க எடப்பாடி உத்தரவு போட்டிருப்பதால் – ஸ்டாலின் கலக்கமடைந்து அறிவாலயத்தில் கதறும் சத்தம் கேட்டதாக ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் கப்சா உ.பி தெரிவித்தார்.

பகிர்