நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து அதற்கான தொகை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முதல் அலையை விட 2 வது அலை மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் சிகிச்சை பெறும் நபர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை என்பது அத்தியாவசியமானதாக இருக்கிறது.
குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடனும் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ”கொரோனா பெருந்தொற்றினால் நமது அன்புக்குரியவர்களில் பலர் நம்மை விட்டு சென்றுவிட்டனர். நமது சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றனர்.
கடந்த ஓராண்டு காலமாக, இந்த தொற்றுநோயை சமாளிப்பது தொடர்பாக அவர்கள் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ளனர். தற்போதைய கொரோனா நிலைமையைச் சமாளிக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் மத்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.
தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் இலவசமாக தடுப்பூசி அனுப்பியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் இதன் மூலம் பயனடையலாம். மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்” என்று பேசினார்.
இதற்கிடையே பிரதமர் பதவியில் இருப்பவர் தொலைக்காட்சி வானொலி போன்ற ஊடகங்களில் அடிக்கடி பேசினால் கொரோனா பயந்து நாட்டைவிட்டே ஓடி விடும் என RSS பஞ்சாங்கத்தில் போட்டிருப்பதாக மோடி கப்சா பேட்டியில் கூறினார்.