தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தரக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன. அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துசென்றால் தமிழகத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்.
தமிழகத்துக்கான ஆக்சிஜன் தேவையை முதலில் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்துக்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தவறான கணக்கீடு. தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டால் தமிழகத்துக்கு 310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுகவையும் யாகம் நடத்துவதையும் பிரிக்க முடியாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் அவ்வப்போது யாகம் குறித்த தகவல்கள் வெளியாகும்.
தற்போது இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என அமைச்சர் பெருமக்கள் கோவில் கோவிலாக சென்றுவந்தனர்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, வியாழக்கிழமை காலையில் ஜெயலலிதாவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள வள்ளலார் குடிலில், ஐந்து நாட்கள் யாகம் செய்துள்ளார். இந்த யாகத்தில் 234 தொகுதிகளை குறிக்கும் விதமாக 234 கலசங்களை பயன்படுத்தியுள்ளார் என்கிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டதால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.
இந்நிலையில் கொல்லிமலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தான் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும் போது காரை குனிந்து வணங்கி சர்ச்சையில் சிக்கியவர்.
அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அமைச்சர் யாகம் செய்தது மட்டுமல்லாமல் அதை வீடியோவாக பதிவு செய்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் அனுப்பியதாகவும் கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
தேர்தலில் தோற்றால், என் வயிற்றில் கட்டி இருக்கும் கொரோனா என்ற நெருப்பை தூக்கி ஸ்டாலின் கையில் கொடுத்துவிட்டு நடை பிணமாக விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன் என்றார் பழனிசாமி.
முகப்பு அதிகபேர்க்கு பிடித்தது மே 2 என் வயிற்றில் கட்டியிருக்கும் கொரோனா நெருப்பை ஸ்டாலின் தலையில் இறக்கி வைத்து விடுவேன்-...