தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. ஏப்ரல் 6 ம் தேதி பதிவான ஓட்டுக்கள் இன்று காலை துவங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல தொகுதிகளில் கடும் போட்டி, இழுபறி நிலவி வருகிறது.

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியாகி உள்ளது. இந்த வெற்றிக்காக ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் டிரெண்டிங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆகியோர் முன்னணியில் இருந்து வருகின்றனர். அரசியல் டிரெண்டிங்கை பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னணியில் உள்ளார். முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஏராளமானோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் கமல் முதல் இடத்தில் இருந்து வருகிறார். கமலஹாசன், கோவைதெற்கு, வானதி போன்ற ஹேஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல் மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனை குறிப்பிட்டு பலர் டுவனெ்டி 20 மேட்ச் பார்ப்பது போல் உள்ளது எனவும், தனி ஒருவரின் வெற்றிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வதாகவும், இருவரின் யார் வெற்றி பெற வேண்டும் என கேட்டும் பலர் கருத்து பதிவிட்டனர்.

இந்த நிலையில் கப்சா நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “என் தந்தை இருக்கும் வரை என்னால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை, அவர் சக்கர நாற்காலியில் இருந்த போதும் என்னை சாதா நாற்காலியில் அமர விடவில்லை, இலவு காத்த கிளியான நான் எனது பஞ்சைப் பலகாரமாக்கி எனது சபதத்தில் வென்றேன். எனவே போலி வேஷம் போடப் பொருத்திய ‘விக்’கை சாணக்ய சபதம் போல் பாவித்து, பதவியேற்பு விழாவில் மணிமுடியை ஏற்றபின் கழற்றி வீசி விடுவேன்..” என்றார்.

பகிர்