அம்மா உணவகத்தை சேதப்படுத்திய இரண்டு பேரை திமுகவில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். நவசுந்தர் & சுரேந்திரன் ஆகியோர் டிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக கூறியுள்ளார்.


சென்னை முகப்பேறு பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்குள் நேற்று காலை புகுந்த 2 பேர், பெயர்ப்பலகைகள் உள்ளிட்ட அனைத்தையும் சூறையாடினர். உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தினர். இதனிடையே கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உணவளித்த உணவகத்தை தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்தவுடனேயே தாக்குகிறார்கள்” என்ற கருத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். பலருக்கும் உணவளித்த அம்மா உணவகம் சூறையாடப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திமுகவினர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது மு.க ஸ்டாலினின் கவனத்திற்கு எட்டியது. கடும் கோபம் அடைந்த அவர், பெயர் பலகையை உடைத்தெறிந்து அம்மா உணவகத்தை சூறையாடிய நபர்களை கைது செய்ய உத்தரவிட்டதுடன், கட்சியிலிருந்து நீக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய இருவர் மீதும் 294 பி, 427, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் ஜெயலலிதா படத்துடன் கூடிய அம்மா உணவக பெயர் பலகையை பழையபடி இருந்தது போலவே திமுகவினர் எடுத்து ஒட்டினர்.


இந்நிலையில் அம்மா உணவகத்தை சேதப்படுத்திய நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய இரண்டு பேரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 92வத வடடத்தைச் சேர்ந்த நவசுந்தர் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.


இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கலைஞரின் அன்னை அஞ்சுகம் அம்மாள் பெயரை குறிக்கும் விதமாக ‘அஞ்சுகம் அம்மா உணவகம்’ என்று மாற்றம் செய்ய ஸ்டாலின் கப்சா செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்