தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அப்போது மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விற்பனை நடைபெற்றது.

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

அதில், நேற்று சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடி, மதுரையில் ரூ.87.20 கோடி, சேலத்தில் ரூ.79.82 கோடி, கோவையில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது அனேகமாக தமிழகத்தின் வரலாற்றில் மதுவிற்பனையில் ஒரு நாளில் நடந்த உச்சபட்ச விற்பனை நேற்று தான் இருந்திருக்கும். ஆனால் இன்று அந்த சாதனையை முந்தவும் வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 கோடியே, 40 லட்சத்து 80 ஆயிரம் பேர் மது அருந்த தேவையான மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளது. இந்த புள்ளி விவரம் சரியானது அல்ல என்றாலும், நேற்று நடந்த விற்பனைய ஒரு குவாட்டருக்கு 120 ரூபாய் என்று வைத்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட 3.40 கோடி குவாட்டர்கள் என்கிற அளவிற்கு வருகிறது.

அதாவது ஒருவர் ஒரு குவாட்டர் அருந்துகிறார் என்று வைத்துக்கொண்டால் 3 கோடியே 40 லட்சம் பேர் இந்த மதுவை அருந்த முடியும். அதாவது தமிழகத்தின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பாதி அளவிற்கு மது அருந்த முடியும். மது என்பது நேற்று ஆறாக ஓடியிருக்கிறது.

நாளை முதல் லாக்டவுன் போட்டுவிட்டால் இனி மது வாங்க முடியாதே என்று அச்சத்தில் பலரும் மொத்தமாக வாங்கி உள்ளதே இதற்கு காரணம். வழக்கமாக தமிழகத்தில் 100 கோடிக்கு தான் மதுவிற்பனை நடைபெறும். ஆனால் நேற்று சென்னையில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது அனைத்து வகையான மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதன் காரணமாக நேற்று காலை கடை தொடக்கப்பட்ட நேரம் முதலே அதிகப்படியான மக்கள் கடைகளில் மது வாங்க வரிசைகளில் நின்றனர்.

இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நேற்று மாலை 6 மணி வரை இயங்கும் என்றும் ஞாயிற்றுக் கிழமையான இன்றும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மரக்கட்டைகள் அமைத்து சமூக இடைவெளியுடன் மதுவாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 14 நாட்கள் ஊரடங்கு என்பதால், மதுபாட்டில்களை அதிகளௌவில் வாங்கி கையிருப்பு வைத்துகொள்ளும் வகையில், மதுபிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார்கள்..

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை பைகளிலும், பெட்டிகளிலும் மதுபிரியர்கள் வாங்கி செல்கிறார்கள். இதனால், இன்று 500 கோடிக்கு மேல் விற்பனை ஆகவும் வாய்ப்பு உள்ளது. அதாவது மதுவிற்பனையில் தமிழகம் புதிய சாதனை (வேதனை) படைக்க வாய்ப்பு உள்ளது.

எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் ஓ.பி.எஸ் பெரிதாக யாரிடமும் வம்பு தும்பு வைத்துக் கொள்ளாதவர். கட்சியிலும் அவரது அணுகுமுறை சாஃப்ட் மோடில் தான் இருக்கும். ஜெயலலிதா இறந்த போது, முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்ற போது கூட, சட்டசபையில் திமுகவினரிடம் அவர் சிரித்த முகத்துடன் பேசியது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுக பரம எதிரி கட்சியாக இருந்தாலும், அவர்களுடன் மென்மையான அணுகுமுறை கொண்டிருந்தவர் ஓ.பி.எஸ். 2021 சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்த அளவுக்கு ஓ.பி.எஸ். பெரிதாக விமர்சிக்கவில்லை.

தேர்தல் கர்டஸிக்காக சில இடங்களில் விமர்சித்தாரே தவிர, எடப்பாடி அளவுக்கு காரசார மோதலின்றி பார்த்துக் கொண்டார். இப்படியாக, மு.க.ஸ்டாலினிடமும், திமுகவினரிடமும் ஒருவித சாஃப்ட் கார்னர் காட்டும் ஓ.பி.எஸ். இன்று அதிமுக சார்பில் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டதில் பெரிய ஆச்சர்யமில்லை.

ஓ.பன்னீர்செல்வம் டாஸ்மாக் மூடல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, “கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்த் தொற்று பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசிதீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன் இதனால் அடுத்த பதினைந்து நாட்களுக்கு டாஸ்மாக் கலெக்-ஷன் போச்சா!. மிகச்சிறப்பு மிக்க மகிழ்ச்சி,” என்று கப்சா பேட்டியில் கூறினார்.

பகிர்