சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர் இன்று அவரிடம் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

மாணவிகளிடம் வாட்ஸ்அப் மூலம் சேட் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் தனது செல்போனில் உள்ள மாணவிகளின் புகைப்படங்களை டெலிட் செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அதே பள்ளியில் தன்னைப் போன்ற சில ஆசிரியர்கள் இதேபோல் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டிருப்பதாக ராஜகோபாலன் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது கல்வித்துறை மற்றும் காவல்துறை தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் சற்றுமுன்னர் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கோலிவுட் பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, ‘கர்ணன்’ படத்தில் நடித்த லட்சுமி பிரியா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு செய்துள்ளனர்.

இந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்பதும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பும் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பொருகாலத்தில் பெண்வெறிலால் புரோகித் நிர்மலா மாமி பாலியல் புகார் தொடர்பான செய்திகளை வைத்து அதிமுக காய் நகர்த்தியது போல், இந்த முறை திமுக பள்ளிப் பாலியல் கதைகளை வைத்து, ஊரடங்கு அமல், கொரோனா உச்சம் போன்ற செய்திகளை செயலிழக்கச் செய்ய முயற்சித்து வருகிறது என கப்சா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்