மறைந்த கருணாநிதி யின், 97வது பிறந்த நாளை ஒட்டி, கொரோனாவைப் புறக்கணித்து, பல்வேறு திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், இன்று(ஜூன் 3) துவக்கி வைக்க உள்ளார்.

காலை, 9:00 மணி: சென்னை, மெரினா கடற்கரை; கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.

காலை, 10:30 மணி: தலைமைச் செயலகம்; அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை, இரண்டாவது தவணை, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம்; 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கி வைப்பு.

கொரோனா நோய் தொற்றால் இறந்த, பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய்; மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவலர், நீதிபதிகள்குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கல்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட பயனாளிகள், 10 பேருக்கு, அரசு பயன்களை, முதல்வர் வழங்க உள்ளார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கான கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தை நாளை ஜூன் 3ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாள் அன்று அறிவித்தார். இந்த திட்டம் திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கையெழுத்திட்ட 5 திட்டங்களில் இந்த கொரோனா நிவாரண நிதி திட்டமும் ஒன்று. அதில் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் எனவும், மீதமுள்ள இரண்டாயிரம் இரண்டாவது தவணையாக ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் தவணை ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது.

தற்போது, கொரோனா நிவாரண நிதியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை நாளை ஜூன் 3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். முதல் தவணை கொரோனா நிவாரண நிதி பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த முறை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அதில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும், கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள், பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.

அடுத்ததாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி வழங்கும் திட்டமும், திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டமும், மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதை கப்சா நிருபர்கள் தட்டிக் கேட்டனர். ‘ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. கொரோனா மக்களை கொன்று குவித்தாலும், எங்களுக்கு கட்டுமரத்தின் பர்த்டே பார்ட்டி தான் முக்கியம், வரலாறு பழி சொல்லும் அல்லவா?’ என கப்சா நிருபரிடம் எதிர்கேள்வி கேட்டார் ஸ்டாலின்

பகிர்