மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளையே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாக பொய்யான தகவல் இணையத்தில் உலவி வருகிறது. இந்த செய்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார், இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, இது தொடர்பாக வந்துள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகள் முன்பு அரைநிர்வாணமாக வந்ததை அடுத்து ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குமுறைப்படுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் எவ்வாறு உடையணிய வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றுதான் வகுப்பெடுக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் நீட் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. அந்த தேர்வை நடத்த விடமாட்டோம்.
மீறி நடத்தினால் போராடுவோம். நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த அனுமதிக்க மாட்டோம். நீட் தேர்வு கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்; 12ம் வகுப்பு மதிப்பெண் முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் இருக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அடுத்து அவர் மீது விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளையே மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாக பொய்யான தகவல் இணையத்தில் உலவி வருகிறது. இந்த செய்தி உண்மை கிடையாது.
இந்த செய்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளையே மட்டுமே நியமனம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, இது தொடர்பாக வந்துள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம், தமிழக அரசு இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் இது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
யாரோ உங்கள் நியூஸ் வாசகர் பரப்பி விட்ட செய்தி இது என்பது கப்சா நிருபரின் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.