தமிழக அரசியலில் புயலை கிளப்பும் ஒரு முக்கியமான தருணம் இது! அதிமுக-பாஜக உறவின் மீண்டும் மலர்ச்சியா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க தொடங்கியிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (ஈபிஎஸ்), முன்னணி தலைவர்களுடன் டெல்லிக்கு புறப்பட்டதும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. வெளிப்படையாக, “அதிமுக அலுவலகம் பார்ப்பதற்காக செல்கிறோம்” என்றாலும், உண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காகத்தான் சென்றார் எடப்பாடி..
2026 சட்டமன்ற தேர்தல் குறித்து எடப்பாடி அதிமுகவின் நான்கு நிபந்தனைகள் விடுத்ததாக தெரிகிறது.
முக்கிய முடிவுகளை அமித் ஷா எடுக்கும் முன், ஈபிஎஸ் தனது நான்கு நிபந்தனைகளை கூறி உள்ளாராம்.
- அதிமுக தலைமையேற்க வேண்டும் – கூட்டணியில் முதன்மை நிலை அதிமுகவுக்கே!
- தொகுதி ஒதுக்கீடு அதிமுகவே தீர்மானிக்க வேண்டும் – பாஜக எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பதையும் அதிமுகவே முடிவுசெய்யும்!
- ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா – நுழையவே கூடாது – கட்சி களமிறங்கும் முன்பே போட்டிகளை நீக்க வேண்டும்!
- அண்ணாமலை பதவியில் நீங்க வேண்டும் – தமிழக பாஜகவின் முகம் மாற்றப்படவேண்டும்!
ஏற்கனவே பாஜகவின் முன்னணி தலைவர்கள் சிலர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தாலும், அண்ணாமலை மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதை பொறுத்து கொள்ள முடியாத ஈபிஎஸ், அண்ணாமலை பதவியில் நீங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால், பாஜகவுக்குள் குழப்பம் ஏற்பட்டது!
அதே சமயம், அண்ணாமலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டார்! அவரை அமித் ஷா சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அண்ணாமலை மாற்றப்படுவாரா? இல்லையா? என்பது தமிழக அரசியலில் சூடுபிடித்த விவாதமாகியுள்ளது.
கூட்டணி கணக்குகள் மற்றும் பாஜகவில் அதிரடி மாற்றம்?
மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தவித்த பாஜக, தற்போது தமிழகத்தில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியை உருவாக்க விரும்புகிறது. இதற்காக, அதிமுகவின் கோரிக்கைகளை ஏற்கும் வாய்ப்பும் இருக்கிறது.
எதிர்பாராத அரசியல் திருப்பங்களுக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில், அண்ணாமலை பதவியில் நீக்கப்படுவாரா?, அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக அமையுமா?, அமித் ஷா முடிவு என்ன? – இதற்கான பதில் அடுத்த சில நாட்களில் கிடைக்கும்!
பால்வாடி மாணவன் மிஸ் கிட்டே மாட்டி விட்டது போல் அண்ணாமலை வேண்டாம் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளது தமிழக அரசியலில் நகைச்சுவையை கிளப்பி உள்ளது.










































