சென்னை: அடுக்கடுக்காக அடி வாங்கி வரும், தனது திரைப்படங்களை பார்த்து கதி கலங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி, எப்படியாவது ‘கபாலி’யில் சரிந்த இமேஜை சரி செய்து செய்துவிடவேண்டும் என்று இமயமலையை தாண்டி யாகம் செய்துகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், கபாலி விளம்பர ஸ்டண்டுக்காக ஏர் ஏசியா நிறுவனத்துடன் கைகோத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி, ஏர் ஏசியாவின் விமானங்களில் கபாலி படம் விளம்பரம் செய்யப்படும். மேலும் படம் வெளியாகும் தினத்தன்று சென்னையில் முதல் காட்சியில் தியேட்டர்களை செயற்கையாக நிரப்புவதற்கு பெங்களூரிலிருந்து சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் வீடு இல்லாவிட்டாலும் கழிவறை கட்டுவோருக்கு ‘கபாலி’ படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, டிக்கெட் விற்பனையை மேலும் அதிகரிக்க ரஜினி ஒரு கபாலி டிக்கெட் வாங்கினால் டாஸ்மாக் குவார்ட்டர் இலவசம் என அறிவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுவில் மக்களை மயக்கி வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் குறையும் டாஸ்மாக் விற்பனையை கருத்தில் கொண்டு, ஒரு டாஸ்மாக் குவார்ட்டரை இலவசமாகக் கொடுத்தால் எப்படியும் குடி மக்கள் அடுத்தடுத்து நிறைய சரக்கு வாங்குவார்கள் என்று வியாபாத் தந்திரக் கனக்குப் போட்டு இதற்கு அனுமதி வழங்கியதாகத் தெரிகிறது. இதற்காக தயாரிப்பாளர் கலைப்’புளி’ தாணு, தான் முன்பு வைகோவோடு சேர்ந்து நடத்திய ‘புலி’ வியாபாரத்தில் கிடைத்த வருமானத்தை ‘கபாலி’க்காக செலவிட முன்வந்துள்ளதாகத் கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks