இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.. இதற்கு வேலியன்ட் என பெயரிட்டடார்.. இந்த நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைத்தனர். இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஒரு தமிழர் சிம்பொனியை அரங்கேற்றுவது நமக்கு பெருமை தரக் கூடிய விஷயமாகும். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றினார்.
தமிழராக உணர்கிறேன் என்பதை விட மனிதராக உணர்கிறேன். இது என்னுடைய பெருமை அல்ல, நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. incredible இந்தியா மாதிரி, incredible இளையராஜா என்றார்.மேலும் கடந்த வாரம் இளையராஜாவின் வீட்டிற்கே சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவரிடம் சிம்பொனி நோட்ஸ்களையும் இளையராஜா காண்பித்து மகிழ்ந்தார்.
லண்டனில் இருந்து மற்றொரு விமானத்தில் திரும்பிய பிரபல இசையமைப்பாளர் ரகுமான் இதை தனது வீட்டில் உள்ள 102 இன்ச் டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாக சிவாஜி படங்களில் வருவது போல் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. 58 வயதான இசைக்கலைஞர் ரகுமான் அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மேலாளர் செந்தில் வேலன் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தற்போது வீட்டில் குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். முன்னதாக, ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரெய்ஹானா, நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறும் செய்திகளை நிராகரித்தார், மேலும் அவர் சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நீரிழப்புதான் காரணம் என்று தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்த தன்னை ரகுமானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கூறி வரும் முந்தாநாள் மனைவி சாயிரா கூறும்போது, இது சாதாரண நெஞ்சுவலி அல்ல, 33 வருட பனிப்போர். ரோஜா படம் வெளியான நாளில் இருந்து ‘இளையராஜா’ என்ற ஒரு இசை அமைப்பாளரே அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். அன்று வாங்கிய அடி இன்று வரை எந்திரிக்க முடியாமல் கிடந்த இளையராஜா, இரண்டு ஆஸ்கர் வாங்கிய என் முன்னாள் கணவர் ரகுமானை முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு சிம்பனி இசைத்தது தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் என் முன்னாள் கணவர் ரகுமானுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதுவேறு இல்லாமல் ரம்ஜான் நோன்பு இருந்த என் கணவர் பிளைட்டில் கொடுத்த இளநீரை வேறு குடித்து விட்டார், அதான் அவரை லேசாக அப்பீட் ஆக்கி விட்டது என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.










































