விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன், லீக்கான அந்தரங்க வீடியோ பற்றி விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் சக்கைப் போடு போட்டு வரும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டு வரும் இந்த சீரியல் விஜய் டிவியில் அதிக டிஆர்பி அள்ளும் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லியாக நடிக்கும் ரோகிணிக்கு தோழியாக வித்யா என்கிற கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இவர் இந்த சீரியலில் ரோகிணி செய்யும் அனைத்து கோல்மால் வேலைகளுக்கு துணை நிற்பார் வித்யா. இவருக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான பாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்கிற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வந்தது.
ஒரு சிலரோ இது மார்பிங் வீடியோ என கூறி வந்தாலும், சிலரோ இது ஒரு casting couch வீடியோ எனவும் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்திருக்கிறார்கள் என்றும் கூறி வந்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், டெலிகிராம் என பல்வேறு சோசியல் மீடியா தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வந்தது. இந்த வீடியோவை யாரேனும் திட்டமிட்டு பரவ விட்டார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வீடியோ லீக் ஆன பின்னர் ஸ்ருதி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தை பிரைவேட்டில் போட்டார்.
அதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி நாராயணன் இன்று தனது இன்ஸ்டா பக்கத்தை பப்ளிக்கிற்கு மாற்றி இருக்கிறார். அதில் தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஸ்டோரியில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு, தன்னைப்பற்றி பரவி வரும் வீடியோவுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.
அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள் என கேட்டு, பின்னர் உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருக்கிறார் ஸ்ருதி.
இந்நிலையில் விஜய் டிவியில் ‘நீயா நானா’ என்ற டாக் ஷோ பல ஆண்டுகளாக கோபிநாத் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திட்டமிட்டு பொய் கருத்துகள் பரப்பப்படுவதும், பங்கேற்ற நபர்களே திரும்ப திரும்ப பங்கேற்று வெவ்வேறு கருத்துக்களை பேசுவதும் வழக்கம்.
சுருதி நாராயணன் வைரல் வீடியோ லீக் ஆன நிலையில், சூப்பர் கண்டன்ட் கிடைத்தது என்று துள்ளி குதித்த கோபிநாத். விஜய் டிவியில் பெண்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு எபிசொட் தயாரிக்க இருப்பதாகவும், அதில் வீடியோ வெளியிட்ட நபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் எனவும் சின்னத்திரை வட்டார பட்சி கிசுகிசுக்கிறது.










































