ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்தே ராமர் பாலம் பகுதியை தரிசித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இலங்கையில் இருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது தரிசனத்துடன் ஆசிர்வாதமும் கிடைத்தது.
அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே நேரத்தில், ராமர் பாலத்தின் தரிசனமும் தற்செயலாக கிடைத்தது. இருவரின் தரிசனமும் பெறுவது பாக்கியமே. நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீராமரின் ஆசிர்வாதம், எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக, எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் மண்டபத்துக்கு வந்தடைந்தார்.

மண்டபத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் ரவி, ராமநாதபுரம் ஆட்சியர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், நவாஸ்கனி எம்.பி., ஜி.கே. வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா தமிழிசை சௌந்தரராஜன், கருப்பு முருகானந்தம், சரத்குமார், அரவிந்த மேனன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி – சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேசுவரம் – தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் பழுதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்தப் புதிய ரயில் பாலம் கப்பல் செல்கையில் செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு தூக்கப்படுகிறது.
இந்த நிலையில், செங்குத்து பாலத்தை இறக்கும்போது சிறிது நிமிடங்களில் பழுது ஏற்பட்டு பாலம் கோணலாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, அதாவது தூக்கு பலத்தை கப்பல் கடந்து சென்ற பிறகு மீண்டும் மோடி ராமேஸ்வரம் செல்ல பாலத்தை இறக்க முயன்றனர். அப்போது ஒரு பக்கம் ஏற்றமாகவும் ஒரு பக்கம் இறக்கமாகவும் சிக்கி கொண்டதை தந்தி டிவி படம் பிடித்து ஒளிபரப்பு செய்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அதிகாரிகள் பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே பாலம் பழுதடைந்ததால் எதிர்க் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

மக்களை மோசமான ஆட்சியால் நடுக்கடலில் தள்ளிய மோடி போல நடுக்கடலில் கடந்து செல்ல கட்டிய பாலமும் தொடக்க நாள் அன்றே ‘மக்கர்’ செய்தது மோடியின் ஆட்சி ஒரு டூப் ஆட்சி என்பதை நிரூபணம் செயகிறது. இந்த நிகழ்வை போற்றும் வகையில் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொரிக்கும் பொருட்டு பாம்பன் என்ற பெயரை ‘கோவிந்தா கோவிந்தா பாலம்’ என மாற்ற வேண்டும் என சங்கிகள் கோரிக்கை வைத்துள்ளனர் .










































