இன்று விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக பொதுக்குழு நடைபெற்றது. நடிகர் விஜய் வில்லியம் பிளேக்கின் Men may come men may go but i go on for ever வரிகளை மேற்கொள் காட்டுவதாக பேசினார். இந்த வரிகள் உண்மையிலயே எழுதியது வில்லியம் பிளேக் அல்ல.
பொதுமக்களிடையே செல்வாக்கு கொண்ட நபர்கள் பேசும்போது சிறு விஷயத்தை தவறாக குறிப்பிட்டாலும் சர்ச்சையாகி விடும். பூனை மேல் மதில், கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என ஸ்டாலினும் பழனிசாமியும் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ஸ்டாலின் பெயர் வைத்த குழந்தையின் தந்தை பெயர் ஷேக் அலாவுதீன் என்பதை ‘ஜெயக்கடா’ என்றது இன்றும் கேலி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் பொதுமேடையில் பேசிய விஷயம் சர்ச்சையாகியுள்ளது. தனது பேச்சை முடிக்கும் போது ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் என்ற திருக்குறளுக்கு முன்பாக பிரபலமான Men may come men may go but i go on for ever வரிகளை மேற்கொள் காட்டினார். விஜய் இதை எழுதியவர் யார் என்பதை குறிப்பிடும் போது சற்று தடுமாறிவிட்டார்.
Men may come men may go but i go on for ever எனக் கூறிய இங்கிலாந்து கவிஞர் வில்லியம் பிளேக்கின் பெயரைக் குறிப்பிட்டார். வில்லியம் பிளேக் 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டனில் பிறந்தவர். இவர் எழுதிய சாங்ஸ் ஆஃப் இன்னோசென்ஸ் அண்ட் எக்ஸ்பீரியன்ஸ் மிகவும் பிரபலமானது. அதில் பல கவிதைகளும் இருக்கும். அக்காலத்தில் அவருடைய படைப்புகளுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவருடைய கவிதைகள் உலகளவில் புகழ்பெற்றவை.
Men may come men may go but i go on for ever இந்த வரிகள் ‘தி புரூக்’ என்ற கவிதையில் இடம்பெற்றவை. இதற்கு மனிதர்கள் வரலாம், மனிதர்கள் போகலாம் ஆனால் நான் என்றென்றும் செல்கிறேன் என்பது அர்த்தமாகும். இந்த வரிகள் மிக பிரபலம். தி புரூக் கவிதை எழுதியவர் இங்கிலாந்தில் பிறந்த ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன். அவர் விக்டோரியன் காலத்து கவிஞராவார்.

ஆல்பிரட் லார்ட் டென்னிசன் 1809ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர். தனது எழுத்துகளுக்காக 1850ல் இங்கிலாந்தின் புரவலர் எனும் உயரிய கவிஞர் பதவியை வகித்தார். விஜய் குறிப்பிட்ட வில்லியம் பிளேக் 1757ல் பிறந்து 1827ல் இறந்தவர்.
பேசும் போது எப்போது கவனம் தேவை என்பார்கள். சிறிய விஷயத்தை சொல்லும் விதத்தில் அதன் ஒட்டுமொத்த பொருளும் மாறிவிடலாம். ஏற்கெனவே ஒரு நிகழ்வில் விஜய் ரஷ்ய அதிபர் மாவோ என பேசியிருந்தார். ஆனால் மாவோ புரட்சிகரமான சீன அதிபர் ஆவார். எழுத்தாளர் விவரத்தை விஜய் தவறாக கூறி இருந்தாலும் கருத்தை சரியாக தானே பதிவு செய்தார் என அவரது ரசிகர்கள் வாதிடுகின்றனர்.
திமுக தான் நமது எதிரி என்று கழுத்து நரம்பு புடைக்க பேசி வரும் விஜய் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோணத்தில் பழனிச்சாமி உளறிக் கொட்டியது போலவே பொதுக்குழுவில் தொபுக்கடீர் என வழுக்கி விழுந்தார்.










































