பாமக அன்புமணி பார்முலாவில் – துரை வைகோ ராஜினாமா: ஒரே நாளில் மதிமுகவை ட்ரண்ட்  ஆக்கிய வைகோ – லெட்டர் பேடு கட்சிகளின் தேர்தல் கலாட்டா

மல்லை சத்யாவுடனான மோதல் முடிவுக்கு வந்த நிலையில் துரை வைகோ கட்சியில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவை திரும்ப பெற்றார். மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று  சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. 

இந்த கூட்டத்தில் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், “துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது” என்று பேசினர்.

தொடர்ந்து நிர்வாகிகளின் வலியுறுத்தலையடுத்து துரை வைகோ ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் வைகோ அளித்த பேட்டியில், “துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் திடீரென தலையெடுத்தது. இதைப்பற்றி பலரும் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு கருத்துக்களை போட ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் மல்லை சத்யாவும், துரை வைகோவும் மனம் விட்டு பேசினார்கள். இதுபோன்ற சூழ்நிலை இனி ஏற்படாது. அதற்கு நான் ஒரு போதும் இடம் கொடுப்பது இல்லை என்று உறுதிமொழி கொடுத்து இதை துரை வைகோ ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

துரை வைகோ அதனை ஏற்றுக்கொண்டு, “ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம். நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவகைகளாக இருக்கட்டும் நான் எடுத்த முடிவை திரும்ப பெறுகிறேன் என்றார். வக்பு மசோதாவை நிறைவேற்றிய மோடி அரசுக்கு எதிராக, வருகிற 26 ஆம் தேதி சென்னையில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 முதன்மை செயலாளர் துரைவைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மல்லை சத்யா  இந்த இயக்கத்துக்கும் தலைவருக்கும், எனக்கும் உறுதுணையாக இருப்பேன், பக்கப்பலமாக இருப்பேன் என்று ஒரு வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார்.

அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் முதன்மை செயலாளராக நான் தொடருவேன் என்று சொல்லியிருக்கிறேன். நான் ஏற்கனவே பல தடவை சொல்லியிருக்கிறேன். இந்த இயக்கத்துக்கும், இந்த இயக்க தலைமைக்கும் யார் எல்லாம் உழைக்கிறார்களோ, பாடுபடுகிறார்களோ, அவர்களை என் தலைமேல் வைத்து கொண்டாட நான் தயாராக இருக்கிறேன்.

இயக்க தோழர் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்விற்கு நான் உறுதுணையாக இருப்பேன். இனிமேல் இது போன்ற குழப்பங்கள் இயக்கத்தில் நடக்க கூடாது. இது கட்சிக்கும், தலைவருக்கும் நல்லது அல்ல என்று நான் முடிவு எடுத்துள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.

துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அளித்த பேட்டியில், “என்னுடைய அரசியல் முகவரியாக விளங்கி கொண்டிருக்கிற, குடத்தில் இட்ட விளக்காக இருந்த என்னை குன்றில் மேல் இட்ட விளக்காக அழகு பார்க்கும் வைகோ சொன்னது தான் இங்கே நடந்தது. முதன்மை செயலாளர் துரைவைகோ அவர் அந்த பதவியில் நீடிக்க வேண்டும். என்னுடைய நடவடிக்கைகள் காயப்படுத்தியிருக்குமேயானால் நான் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.

நீங்கள் தொடர்ந்து இயக்கத்தை முன்எடுத்து செல்கின்ற முதன்மை செயலாளராக தொடர வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை சொல்லியிருக்கிறேன். அவரும் மறுபரிசீலனை செய்து தொடர்வதாக சொல்லியிருக்கிறார். இணைந்த கைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம்.

நாங்கள் எப்போதுமே இணைந்து இருக்கிறோம். நானும் துரை வைகோவும் இணைந்து இந்த இயக்கத்தை வைகோ கொண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம்” என்றார். மேலும் துரை வைகோ விலகல் திரும்பபெற்றதையடுத்து 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்தில் அன்புமணி தந்தை ராமதாஸிடம் முறுக்கி கொண்டு முரண்டு பிடித்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். அதற்கு கரணம் ராமதாஸின் மகன் வயிற்று பேரன் முகுந்தன் என்று கூறப்பட்டது. பின்னர் அடங்கியது.

போன மாசம் பாமக வன்னிய நாடகம் தலைப்புச் செய்திகளில் வந்தது. அதனால் இந்த மாதம் மதிமுக நாடகம்… அடுத்து விசிக நாடகம் ஆரம்பித்துவிட்டது. இதெல்லாம் ஒரு பொழப்பு என்று வாழ்கிறார்கள்… மானம் கெட்ட ஜென்மங்கள் இருப்பை காட்டிக் கொள்ள நடத்தப்படும் நாடகம் இது.

அப்பதான் இப்படி ஒரு கட்சி இருக்குன்னு நாலு பேருக்கு தெரியும்.. இப்படியாக.. அனைவருமே நாடகம் ஆட வேண்டும் என்று தாத்தா வையாபுரி கோபால்சாமி திரைக்கதை எழுதியபடியே பேசி நடித்தது கப்ஸா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “அழுக்கு வேஷ்டி” டிவி சீரியலின் குறிப்பிட்ட எபிடுசோடுகளுக்கு இணையாக  ஒரு பிரமிப்பைத் தந்தது. என்றார் உங்கள் நியூஸ் கப்ஸா நிருபர்.

பகிர்