வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையானது கட்டணமாக, வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், வங்கிகள் இந்த பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில், தற்போது ஏடிஎம்களில் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த ஆர்பிஐ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு வங்கியில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏடிஎம்யில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ. 17 லிருந்து ரூ. 19 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பேலன்ஸ் சரிபார்த்தல் அல்லது மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் போன்றவற்றிற்கு ரூ. 6 லிருந்து ரூ. 7 ஆக கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம் சேவைகளை 5 முறை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அதற்குமேல் பயன்படுத்துபவர்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று NHAI அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள வானகரம் உட்பட 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் முதல் கட்டமாக தற்போது 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் உயர்த்தப்படவுள்ள கட்டணம் குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 75 ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வாகனத்திற்கும் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.75 வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிற்க தற்போது ChatGPTயில் ஸ்டூடியோ Ghibli என்ற முறையில் தமது புகைப்படத்தை மில்லியன் கணக்கான பயனாளர்கள் ஓவியமாக மாற்றி எடுத்து பகிர்வது சமூக வலை தளங்களில் Trend ஆகி வருகிறது. இதை பார்த்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘அடிச்சது லக்கி பிரைஸ்’ என்று ChatGPT யில் Ghibli ஓவியங்கள் உருவாக்கினால் 18% GST வரிவிதிக்கப்படும் – என அறிவிக்கலாமா எண்டு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.










































