பரஸ்பர வரி விதிப்பு பற்றி டிரம்ப் என்ன பேசப் போகிறார் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், புதன்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட டிரம்ப், இது அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திடும் என்று குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகை சுமார் 100 நாடுகளின் பட்டியலையும், அவற்றுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி விகிதங்களையும் வெளியிட்டுள்ளது. டிரம்ப் விதித்துள்ள வரிகள், உலகம் முழுவதும் பொருளாதார அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைவாக இருப்பதாகவும், அதே நேரம் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு எக்கச்சக்க இறக்குமதி வரி விதிப்பதாகவும் டிரம்ப் கூறினார். இது அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதும் அவரின் வாதமாக இருந்தது.
பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில், அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிக்க இருப்பதாக டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். “அவர்கள் நமக்கு வரி விதித்தால், நாம் அவர்களுக்கு வரி விதிப்போம்,” என பிப்ரவரியில் டிரம்ப் பேசினார்.
புதன்கிழமை டிரம்ப் பேசுவதற்கு முன் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றார்.
பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதித்த வரிகளையும், அந்த நாடுகள் மீதான அமெரிக்காவின் புதிய வரியையும் ஒப்பிடும் ஒரு பெரிய விளக்கப் படத்தைப் பிடித்தவாறு டிரம்ப் பேசினார்.

இந்த நாடுகள் தவிர்த்து, வியட்நாமுக்கு 46 சதவிகிதமும், இலங்கை மற்றும் மியான்மருக்கு 44 சதவிகிதமும், வங்கதேசத்துக்கு 37 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு ஏப்ரல் 3ஆம் தேதி நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வரும். சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளைப் பற்றி டிரம்ப் பேசியபோதும், கனடா மற்றும் மெக்சிகோ பற்றி அவர் பேசவில்லை. டிரம்ப் ஆட்சியேற்ற பிறகு, எல்லைப் பாதுகாப்பு, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது போன்ற விவகாரத்தில் இந்த நாடுகளுடன் அமெரிக்க மோதல் போக்குடன் செயல்படுகிறது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும், அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
இந்தியாவை பற்றிப் பேசும்போது டிரம்ப், வரி விதிப்பில் இந்தியா மிக மிகக் கடுமையாக நடந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் இருப்பதாக ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடிக்கு கூறி சர்ச்சைக்கு உள்ளது சமீபத்தில் நடந்தது. அவருக்கு ஆதரவாக பா.ஜ.க வின் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாடல் சீனிவாசன் ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதை மேற்கோள் காட்டி பேசிய டிரம்ப், நண்பர் மோடி ஆட்சியில் மாட்டு சிறுநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு மருத்துவ குணம் இருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில், அதை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய 30% கூடுதலாக வரிவிதித்தால் என்ன என்று டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என வெள்ளை மாளிகை பட்சி கூறுகிறது.










































