உங்கள் நியூஸ் கற்பனை செய்தி தளத்திற்கு வந்ததுக்கு முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றி. நாங்க சும்மா வேலை இல்லாத வெட்டி பசங்க டீ கடைல உக்காந்து மத்தவங்கள கிண்டல் பண்ணி கலாய்ச்சிட்டு இருப்பதுக்கு பதிலா இந்த மாதிரி அரசியலையும், சினிமாவையும், அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளையும் இங்க கொஞ்சம் கற்பனை சேர்த்து எழுதுறோம்.
எங்களோட ஒரே நோக்கம் இங்க உள்ள செய்திகள படிச்சிட்டு நீங்க சிரிக்க வேண்டும். அத விட்டுட்டு நீங்க பாட்டுக்கு சிந்திக்க ஆரம்பிச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்ல. அதோட நீங்க சிந்திக்கிறது தமிழ்நாட்டுல ரெம்ப பேருக்கு பிடிக்காது (குறிப்பா அரசியல்வதிகளுக்கும் சினிமாகாரங்களுக்கும்), அதனால சூதானமா இருங்க.
இன்னொரு முக்கியமான விசயம். எதாவுது ஒரு செய்தி உங்களோட அல்லது மத்தவுங்களோட மனச புண் படுத்தறமாரி இருந்தா எங்களுக்கு சொல்லுங்க, உங்க கோரிக்கைல நியாயம் இருந்தா உடனே ஆவன செய்றோம்.
எங்கள உங்களுக்கு புடிச்சிருந்தா இங்க உள்ள நியூச பேஸ்புக் மற்றும் டுவிட்ட்டர்ல ஷேர் பண்ணுங்க. இல்ல எதாவது கம்ப்ளைன்ட் இருந்தா எங்களுக்கு ஈமெயில் அனுப்புங்க.
உங்களுக்கு இந்த மாதிரி நியூஸ் எழுதனும்னாலும், உங்களோட படைப்புகள ஈமெயில் பண்ணுங்க.
இன்னொரு தடவ ஒங்களுக்கு ரெம்ப தேங்க்ஸ்.
என்றும் அன்புடன்,
உங்கள் நியூஸ் ஆசிரியர் குழு
எடிட்டர்@உங்கள் நியூஸ்.காம்