சென்னை: அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன், தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் பிப்ரவரி 14 மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியான நாள் அது. “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்” என்று ஓபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் பிப் 16 அன்று எடப்பாடி பழநிச்சாமியை தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் உடன் ரகசிய சந்திப்புக்கு பின் கமல் “தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை. மக்கள் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட மதிப்பளித்து எப்போதும் உறுதுணைபுரிவர். என்று டிவீட் செய்துள்ளார். இதனால் தற்போது பதவி ஏற்றுள்ள எடப்பாடி தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கப்ஸா நிருபர் தெரிவித்தார்.

தனது திரைப்படங்களில் ரத்தமும் முத்தமும் வைத்து பிசினஸ் செய்துவரும் கமல், தற்போது படங்கள் பப்படமானதால் சுய விளம்பரம் தேடி டிவிட்டர் பேஸ்புக் கதியாகக் கிடக்கிறார். அவ்வப்போது புரியாத மொழியில் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். நீதிமன்றங்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். மக்களும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு மெரினா கலவரத்திற்கு வித்திட்டு கருத்துத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

புதிதாக பதவி ஏற்றுள்ள பெயர் சொல்ல விரும்பாத எடப்பாடி அமைச்சரவை சகா ஒருவர் கப்ஸா நிருபரிடம் புலம்பித்தள்ளியதாவது: ஜெயலலிதா உயிரோடிருக்கும் போது சப்பாணியாக இருந்த கமல்ஹாசன் அவருடைய மறைவுக்கு பிறகு சண்டியராக மாறி வீரவுரை நிகழ்த்துவதை பார்க்கும்போது கண்கள் மட்டுமல்ல காதுகள் மூக்குகள் கூட கலங்குகின்றன. குன்கா தீர்ப்பின் போது கமுக்கமாக டேபிளுக்கடியில் தலையை நுழைத்துக் கொண்டிருந்தவர் இப்போது களத்தில் இறங்கி ”கம்முனாட்டி திருட்டு பொறுக்கி, வேலைக்காரி சதிகாரி” என ஆவேசமாக சசிகலாவுக்கு எதிராக சாந்து பொட்டு சந்தனப் பொட்டு என்று கம்பு சுத்துவதை காணக் கண்ணறாவி காட்சியாக இருக்கிறது. இதையே ஜெயலலிதா உயிரோடிக்கும் போது செய்திருந்தால் ‘உரிய கவனம்’ கிடைத்திருக்கும் என்பதை அறியாதவர் அல்ல இவர். இப்போது வீரவுரை ஆற்றுகிற இந்த விஸ்வரூப வீரபாண்டியன் குமாரசாமி தீர்ப்பின் போது குதூகலித்து கொண்டாட்டம் போட்ட பூனைக்குட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை என்ன செய்வது என்றே தெரியவில்லை. கவுதமி இருந்தபோது தானுண்டு தனது பெண்பித்துண்டு என்று இருந்தவர், அவர் பிரிந்ததும் நிஜ குணாவாகவே மாறி, கலக நாயகனாக வலம் வருகிறார், அவருக்கு சின்னம்மா ஜெயிலில் இருந்தபடியே ரிமோட் கண்டிரோல் மூலமாக ஆக்ஷன் படம் காட்டுவார் பாருங்கள்” என்றார்.

பகிர்

There are no comments yet