சென்னை: சிறுவயதில் காணாமல் போன கலைச்செல்வன் (எ) ‘நடிகர் தனுஷ் தங்கள் மகன்’ என்று மீனாட்சி-கதிரேசன் தம்பதியரால் தொடரப்பட்ட வழக்கு, ஆவணங்கள் குளறுபடியால் சிக்கலில் சிக்கியுள்ளது. ‘வயதான காலத்தில், தங்களைக் கவனிக்க ஆள் இல்லாததால் கஷ்டப்படுகிறோம். கஸ்தூரிராஜா வீட்டில் ‘தனுஷ்’ என்ற பெயரில் வசிக்கும் எங்கள் மகன், எங்கள் பராமரிப்புச் செலவுக்கு மாதம்தோறும் 65 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். “பணம் பறிக்கும் எண்ணத்துடன் போடப்பட்ட பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்’’ என தனுஷ் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

கலைச்செல்வனின் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழை, அந்தத் தம்பதியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கில் முகாந்திரம் இருப்பதாகச் சொன்ன நீதிபதி, தனுஷை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். பிப்ரவரி 28-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தனுஷ் ஆஜரானார். அவருடன் இயக்குநர் கஸ்தூரிராஜா, அவருடைய மனைவி விஜயலட்சுமி வந்தனர்.

இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும் தனுஷ் தரப்பில் தெரிவித்தனர். தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பெயர் மாற்றம் செய்ததற்கான கெஸட் நகல்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் பல கேள்விகளை எழுப்பியதால் ‘சான்றிதழ்களில் சந்தேகம் உள்ளது’ என கதிரேசன் – மீனாட்சி தரப்பின் வழக்கறிஞர் சொன்னார். இதனால் கலைசெல்வன் தான் தனுஷோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்த தனுஷின் முகம் மிகவும் வாடிப்போயிருந்தது. தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்த தனுஷின் முகம் மிகவும் வாடிப்போயிருந்தது. கதிரேசன் மீனட்சி தம்பதியரின் மகன் கலைச்செல்வன் வீரகுடி வெள்ளாள இனத்தைச் சேர்ந்தவர். கம்பம் அருகே சங்கரபுரத்தைச் சேர்ந்த கஸ்தூரிராஜாவும், அவர் மனைவியும் பி.சி வகுப்பான நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், தனுஷின் பள்ளி மாற்றுச்சான்றிதழில், எஸ்.சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.சி-யில் என்ன பிரிவு என்று குறிப்பிடப்படவில்லை. பி.சி வகுப்பைச் சேர்ந்த ஒருவர், எதற்காக தன் பிள்ளையின் சான்றிதழில் எஸ்.சி என்று குறிப்பிட வேண்டும்? எனவே, இந்தச் சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும். இந்தச் சான்றிதழை வழங்கியவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். என புகார் எழுந்துள்ளது. கஸ்தூரிராஜா என்ற பெயரில் நீண்டகாலமாக சினிமா எடுத்து வந்தாலும், தன் ஒரிஜினல் பெயரான கிருஷ்ணமூர்த்தி என்பதை, கஸ்தூரிராஜா என்று அதிகாரபூர்வமாக கெஸட்டில் வெளியிட்டது 2015-ம் ஆண்டில்தான். ஆனால், அதற்கு முன்பாகவே வெங்கடேஷ்பிரபு என்ற பெயரை தனுஷ் என்று கெஸட்டில் மாற்றியதாகக் காட்டும் ஆவணத்தில் தந்தையின் பெயராக கஸ்தூரிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்? அப்படியென்றால், கஸ்தூரிராஜா என்ற பெயரில் ஏற்கெனவே ஆவணங்களை உருவாக்கி வைத்திருந்தார்களா? இந்தப் பெயரில் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறாரா? இவற்றை வழங்கிய அதிகாரிகள் யார்? அவர் காட்டியிருக்கும் ரேஷன் கார்டில் இருக்கும் முகவரியும், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவின் முகவரியும் வேறு வேறாக உள்ளன. இப்படி பல கேள்விகள் உள்ளன. ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றியும் டி.என்.ஏ டெஸ்ட் வேண்டியும் மனு செய்துள்ளனர் கதிரேசன் மீனட்சி. ஏற்கனவே ரஜினி மகள் ஐஸ்வர்யா – சிம்பு ஆடியோ ரிலீசான போது சிம்பு குரலில் பேசியவர் ‘நான் சரவணனிடம் பேசிக்கிறேன்’ என்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்ப அந்த ‘சரவணன்’ தனுஷா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க புது பூகம்பமாக பாடகி சுசித்ரா தனுஷால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படதாக கையில் காயத்துடன் ஒரு புகைப்படம் வெளியிட்டார். பின்னர் பழிவாங்கும் நோக்கத்துடன், கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு திரையுலகினரை அதிர வைத்துள்ளார். இதில் குறிப்பாக தனுஷை குறி வைத்துள்ளார் சுசித்ரா. தனுஷ் த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை முதலில் வெளியிட்டார். பின்னர், தனுஷ் தமன்னா விடியோவை வெளியிட்டார். மேலும், தனுஷ், அமலா பால் லீலை வீடியோவை வெளியிடப் போவதாக தெரிவித்தார். இந்நிலையில், சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அவரது பெயரை பயன்படுத்தி சில விஷமிகள் பல்வேறு ஆபாச படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து தனுஷ் (எ) கலைச்செல்வன் (எ) வெங்கடேஷ்பிரபு கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: நான் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு மெடிக்கல் காலேஜில் சேரவேண்டும் என்று என் (வளர்ப்பு) அப்பா கஸ்தூரி ராஜாவிடம் அழுது அடம்பிடித்தேன். அதற்காக எம்.ஜி.ஆர் வளர்ப்புமகள் நடத்திய தாய் சத்யா பள்ளியில் சேர்த்துவிட்டார்கள், அங்கு என் ஜாதியை எஸ்.சி. என்று மாற்றினால் அரசு கோட்டாவில் மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று சொன்னதால் மாற்றினேன். ஷகிலா படங்கள் பிரபலமாக இருந்த காலகட்டம் அது, சினிமாவில் ஓய்ந்து போயிருந்த என் அப்பா எடுத்த “துள்ளுவதோ இளமை” என்ற ஒரு பிட்டுப்படம் எடுக்க கதாநாயகன் கிடைக்காததால் என்னையே நடிக்க வைத்து, நடிகனாக்கினார். அதில் லிப் லாக் காட்சியில் ஷெரீன் என்ற நடிகையுடன் பட்டையை கிளப்பி இருப்பேன், அப்போதே என் லீலைகளை ஆரம்பித்துவிட்டேன், சுசி லீக்சில் வரும் படங்கள் எல்லாம் மாமா ரஜினி சொல்ற மாதிரி ‘ஜுஜுபி’ தான். நானே தயாரிப்பாளராகவும் உள்ளதால் திரைமறைவில் இன்னும் நிறைய உண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அப்பல்லோவில் காமிராக்களை நீக்கியதுபோல் நீக்கி விடுவேன். டாக்டராக ஆசைப்பட்டு ஜாதியை மாற்றிய எனக்கு ரஜினி டாட்டரை மணமுடிக்கும் வாய்ப்பு கிட்டியது ஆண்டவன் புண்ணியம். கமல் மகளை கட்டிப்பிடித்து நடிக்க கிடைத்த வாய்ப்பு ஒரு பேரின்பம்..” என்று ரஜினி மாதிரி சிரித்து காட்டினார்.

பகிர்

There are no comments yet